ADVERTISEMENT

பாஜகவுக்கு ஆட்சியில் பங்கு தர அதிமுக ஏமாளி அல்ல என பேசியது ஏன்? – எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

Published On:

| By Minnambalam Desk

Why ADMK is not a Deceiver to give BJP a share in the govt? - EPS explains!

பாஜகவுக்கு ஆட்சியில் பாஜகவுக்கு பங்கு தர அதிமுக ஏமாளி அல்ல என பேசியது திமுகவின் விமர்சனங்களுக்கான பதிலடி மட்டும்தான் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். Why ADMK is not a Deceiver to give BJP a share in the govt? – EPS explains!

‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது,

ADVERTISEMENT

கேள்வி : மேட்டுப்பாளையத்தில் ஜூலை 7-ந் தேதி நீங்கள் தொடங்கிய ரோடு ஷோவிற்கு கிடைத்த வரவேற்பு எப்படி?

பதில் : மக்களிடமிருந்து அமோக வரவேற்பு உள்ளது. நான் எங்கு சென்றாலும் பெரும் எண்ணிக்கையில் மக்கள் வருவதைப் பார்க்கிறோம்.

ADVERTISEMENT

கேள்வி : ‘கோட் சூட்’ முதல்வர் என்று மு.க.ஸ்டாலினை நீங்கள் அழைத்தீர்கள். அவர் தனது ‘திராவிட மாதிரி ஆட்சி நாட்டிலேயே சிறந்தது’ என்று கூறுகிறாரே?

பதில் : முதலமைச்சராக அவரது தோல்வி குறித்த மக்களின் மதிப்பீட்டை மட்டுமே நான் பிரதிபலித்துள்ளேன். தனது ஆட்சியில் மக்களின் துன்பங்களைப் புரிந்து கொள்ளாமல், அதிகாரத்தை பயன்படுத்தி தன்னை சிறந்த முதலமைச்சராக அவர் காட்டிக் கொள்கிறார்.

ADVERTISEMENT

கேள்வி : தமிழகத்தில் அண்மை காலமாக, சிறிய கட்சிகள் அதிமுக- திமுகவுடன் கடுமையான பேரம் பேசுகின்றன. சிறிய கட்சிகள், அதிகமான இடங்களை எதிர்பார்க்கிறார்கள். இது குறித்த உங்கள் கருத்து என்ன?

பதில் : சூழ்நிலைகளைப் பொறுத்து, கட்சிகள் தங்கள் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் பொதுவானது. திமுக கூட்டணியைப் பொறுத்தவரை, அதில் இடம் பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகள் தங்களை அந்த கூட்டணியில் உறுதிப்படுத்திக் கொள்கின்றன. இதனால் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்க வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு ஏற்படும்.

கேள்வி :காங்கிரஸ் மற்றும் விசிக போன்ற திமுகவின் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் பங்கு என பேசுவதால், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திமுக கூட்டணி சிதைந்துவிடும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?

பதில் : கூட்டணி உடைந்து விடுமா இல்லையா என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் சமீப காலமாக, திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் அதிகமாக உள்ளன. இது குறித்து ஊடகங்களில் வெளிப்படையாக செய்திகள் வருகின்றன. [காங்கிரஸ் தலைவர்] ராகுல் காந்தி, கம்யூனிஸ்டுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் பெ.சண்முகம், ஒரு போராட்டத்தில் பங்கேற்றபோது, “திமுக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் 98%-த்தை நிறைவேற்றவில்லை என்று கூறியுள்ளார். இதுபோன்ற முரண்பாடுகள் உள்ளன. நீங்கள் குறிப்பிட்டது போல, திமுக கூட்டணி கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்கின்றன. இவை எல்லாம் திமுக கூட்டணியில் பிளவு இருக்கிறது என்பதை காட்டுகின்றன. ஆனால் கூட்டணி விரிசல் ஏற்படுமா என்பதை நாம் யூகமாகக் கூற முடியாது.

கேள்வி : பாஜகவுடனான கூட்டணியை 2023-ம் ஆண்டில் முறித்துக்கொண்ட பிறகு, இப்போது மீண்டும் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளீர்கள். 2026-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு அமையவுள்ள கூட்டணி ஆட்சியில் தாங்களும் அங்கம் வகிப்போம் என்று பாஜக தலைமை திரும்பத் திரும்ப கூறி வருகிறது. ஆனால் ‘ஆட்சியில் பங்கு கொடுக்க, நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல’ என்று கூறியிருக்கிறீர்கள். கூட்டணி ஆட்சி விஷயத்தில் உங்கள் நிலையை தெளிவுபடுத்த முடியுமா?

பதில் : நான் அந்த அர்த்தத்தில் அப்படி சொல்லவில்லை. அதிமுக – பாஜக கூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என்ற ஒரு விஷமப் பிரசாரத்தை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் நடத்தி வருகிறார்கள். அவர்களின் அந்த பிரசாரத்துக்கு பதில் அளிக்கும் வகையில்தான் நான் அப்படி கூறினேன்.

கேள்வி : தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி ஏற்பட்டதில்லை. இந்த சூழலில் கூட்டணி ஆட்சி விவகாரத்தில் பாஜக தலைமைக்கு நீங்கள் சொல்லும் தகவல் என்ன?

பதில் : தமிழக மக்களைப் பொறுத்தவரை தமிழகத்தை ஒரே கட்சி-தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்வதைத்தான் விரும்புகிறார்கள். மக்களின் விருப்பப்படி தமிழகத்தில் பல ஆண்டுகளாக ஒரு கட்சி ஆட்சி முறைதான் நடந்து வருகிறது. இதுவே 2026-ம் ஆண்டிலும் தொடர வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகிறார்கள் எங்கள் விருப்பமும் இதுதான். மக்கள் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் அடுத்த தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

கேள்வி : கூட்டணி ஆட்சி விவகாரத்தில் உள்ள கருத்து வேறுபாடு தொடர்பாக பாஜக தலைமையிடம் பேசுவீர்களா?

பதில் : எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. தங்கள் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த, ஆட்சியில் பங்கு பெறுவோம் என்று தலைவர்கள் பேசுவது வழக்கமான விஷயம்தான். அதிமுக – பாஜக கூட்டணியை முறிக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். அதிமுக – பாஜக கூட்டணி 100 சதவீதம் ஒற்றுமையாகத் தொடர்கிறது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share