IPL 2024: பிளே-ஆஃப் சுற்றில் யார் யாருடன் மோதல்? முழு விவரம் இதோ

Published On:

| By Kavi

Who will qualify for IPL 2024 playoffs

2024 ஐபிஎல் தொடரின் கடைசி 2 லீக் போட்டிகள் மே 19 அன்று நடைபெற்றது. அதில், முதலில் நடந்த போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. 2வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது.

இதில் முதல் போட்டியில், ஐதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டியில், பஞ்சாப் அணிக்கு கேப்டனாக களமிறங்கிய ஜிதேஷ் சர்மா, டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதை தொடர்ந்து களமிறங்கிய அதர்வா டைடெ (46 ரன்கள்), பிரப்சிம்ரன் சிங் (71 ரன்கள்), ரிலீ ரொசோ (49 ரன்கள்), ஜிதேஷ் சர்மா (32 ரன்கள்) ஆகியோர் அதிரடியால், பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 214 ரன்கள் குவித்தது.

பின், அபிஷேக் சர்மா (66 ரன்கள்), ராகுல் திரிபாதி (33 ரன்கள்), நிதீஷ் ரெட்டி (37 ரன்கள்), ஹெய்ன்ரிச் கிளாஸன் (42 ரன்கள்) ஆகியோர் ஐதராபாத் அணிக்கு அதிரடி காட்ட, அந்த அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியது.

இதன்மூலம், ஐதராபாத் அணி 17 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது.

அடுத்து நடைபெறவிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டத்தில், துவக்கத்தில் இருந்தே மழை குறுக்கிட்ட நிலையில், டாஸ் கூட இல்லாமல் அப்போட்டி ரத்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, 2 அணிகளுக்கும் 1 புள்ளி வழங்கப்பட்டது.

20 புள்ளிகளுடன் கொல்கத்தா முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. ராஜஸ்தான் அணியும் 17 புள்ளிகள் பெற்றிருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் அந்த அணி 3வது இடத்தையே பிடித்தது.

*பிளே-ஆஃப் சுற்றில் யார் யாருடன் மோதல்?*

இதை தொடர்ந்து, புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்துள்ள கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள், அகமதாபாத்தில் மே 21 அன்று நடைபெறவுள்ள முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் மோதிக்கொள்ள உள்ளன. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

அடுத்து, 3 மற்றும் 4வது இடங்களில் உள்ள ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள், அதே அகமதாபாத் மைதானத்தில் மே 23 அன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் மோதிக்கொள்ள உள்ளன.

முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் தோல்வியடையும் அணியும், எலிமினேட்டர் ஆட்டத்தில் வெற்றி பெரும் அணியும், 2வது குவாலிஃபையர் ஆட்டத்தில் மோதிக்கொள்ளும். இந்த போட்டி மே 24 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த 2வது குவாலிஃபையர் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் வெற்றி பெற்ற அணியுடன் மே 26 அன்று இறுதிப்போட்டியில் மோதும். அந்த போட்டியும், சென்னை சேப்பாக்கம் மைதானத்திலேயே நடைபெறவுள்ளது.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள் : 5ஆம் கட்ட தேர்தல் முதல் ஊட்டி ரயில் சேவை ரத்து வரை!

கிச்சன் கீர்த்தனா: கேரட் டீடாக்ஸ் ஜூஸ்!

“1% வாய்ப்பு…”: கோலியின் RCB இப்படி செய்வது இது முதல் முறை அல்ல!

தோனி அடித்த சிக்ஸ் தான் சென்னை அணியின் தோல்விக்கு காரணமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share