தாய்மார்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களையும் கட்டிப்போட்ட மெட்டி ஒலி சீரியலின் 2-வது பாகம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
கடந்த 2002-2005 வரை சின்னத்திரையில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பையும், டிஆர்பி ரேட்டிங்கையும் மொத்தமாக அள்ளிய தொடர் என்றால் அது ‘மெட்டி ஒலி’ தான்.
சீரியலுக்கு கிடைத்த அமோக வரவேற்பால் இரண்டு முறை ரீ-டெலிகாஸ்ட் ஆகி விட்டது ‘மெட்டி ஒலி’. என்றாலும் இன்று வரையும் கூட இந்த சீரியலின் மவுசு குறையவில்லை.
இந்த நிலையில் மெட்டி ஒலி சீரியலின் 2-வது பாகம் குறித்த நம்பகத்தகுந்த தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி இயக்குநர் விக்ரமாதித்யன் இந்த பாகத்தை இயக்க உள்ளாராம்.
இதற்கான ஆடிஷன் தற்போது நடந்து வருகிறதாம். அதோடு முதல் பாகத்தில் நடித்த நடிக, நடிகையரிடமும் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
முதல் பாகத்தை தயாரித்த ‘சினி டைம்ஸ்’ நிறுவனம் தான், இந்த இரண்டாவது பாகத்தினையும் தயாரிக்கப் போகிறதாம்.
விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சேனல் தரப்பில் இருந்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘மெட்டி ஒலி’ சீரியலின் முதல் பாகத்தை இயக்குநரும், நடிகருமான திருமுருகன் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எந்நேரமும் கைது? அமர் பிரசாத் ரெட்டிக்கு இடைக்கால நிவாரணம் மறுப்பு!
“என் கைதில் ஆளுநருக்கும் தொடர்புள்ளது” -சட்டமன்றத்தில் சீறிய முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்