ப்ரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டி : ரூ.1.72 கோடி வெல்லப்போவது யார்?

Published On:

| By christopher

who will be winner of freestyle chess prize 1.72cr

ப்ரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, அமெரிக்க வீரர் லெவன் அரோனியனிடம் 2-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். who will be winner of freestyle chess prize 1.72cr

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர் நடந்து வருகிறது. இதில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்ஸனை வெறும் 39 நகர்வுகளில் தோற்கடித்து வெளியேற்றினார் இந்தியாவின் நம்பர் 1 கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா.

ADVERTISEMENT

இதன்மூலம் காலிறுதிக்கு போட்டிக்கு தகுதிபெற்ற அவர், அமெரிக்க வீரர் ஃபேபியானோ கருவானாவிடம் 3-4 என்ற கணக்கில் கடுமையாகப் போராடி தோல்வியடைந்தார்.

அதே நேரத்தில் இந்திய கிராண்ட்மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசட்டோரோவை 1.5-0.5 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

ADVERTISEMENT

இதனையடுத்து இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் அரோனியனிடம் 2-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தார் அர்ஜுன்.

மற்றொரு அரையிறுதியி போட்டியில் ஃபேபியானோ கருவானா சக நாட்டு வீரரான ஹான்ஸ் நீமனிடம் 1.5-2.5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

ADVERTISEMENT

இதனைத்தொடர்ந்து நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் அமெரிக்கர்களான நீமன் மற்றும் அரோனியன் மோத உள்ளனர்.

இதில் சாம்பியன் பட்டம் வெல்பருக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் ரொக்க பரிசாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share