இன்று காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில் அடுத்த தலைவர் யார் என்று கணித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜோதிடர் பாலாஜி ஹாசன்.
சேலத்தைச் சேர்ந்த ஜோதிடரான பாலாஜி ஹாசன் ஐபிஎல் போட்டி தொடங்கி சர்வதேச கிரிக்கெட் வரை நடைபெறும் போட்டிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கணித்து வெளியிடுவார்.
சில சமயங்களில் இவரது கணிப்பு சரியாகவும் இருக்கும், சில சமயங்களில் இல்லாமலும் இருக்கும்.
கிரிக்கெட் போட்டிக்கு கணித்து சொல்லி வந்தவர், இன்றைய காங்கிரஸ் தேர்தலிலும் யார் வெற்றி பெறுவார்கள் என்று கணித்து முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான போட்டி மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் சசி தரூர் அவர்களுக்கு இடையே நடந்தது.,
இவர்களின் இருவர் ஜாதகத்தை அலசி ஆராய்ச்சி செய்த போதும் எனக்கு அறிந்த ஜோதிட அறிவை வைத்து பார்க்கும் போதும், இருவர் ஜாதகத்திலும் ” சக யோகம் ” பலமாக உள்ளது.
ஆனால் தற்சமயம் சசி தரூர் ஜாதகத்தில் கோச்சார சனி மகரத்தில் இருந்து கும்பத்தை நோக்கி நகர்வது மேலும் பலமாக அமைகிறது.,
அதே சமயம் மல்லிகார்ஜுன கார்கே ஜாதக ரீதியாக பார்க்கும் பொழுது நடக்கும் செவ்வாய் புத்தியானது அவரது சுய ஜாதகத்தில் கிரக இறுக்கம் ஏற்பட்ட நட்சத்திர சாரத்தில் செவ்வாய் பகவான் இருப்பது கடும் போட்டியை இவர் ஏற்படுத்தினாலும் வெற்றி வாய்ப்புக்கு மிக அருகில் வருவார்.
சசி தரூருக்கு நடக்கும் சூரிய புக்திநாதன் அங்கீகாரத்தை கொடுக்கும். மேலும் கோச்சாரராக பரணி நட்சத்திரத்தில் இருந்துசசி தரூர் அவர்களுக்கு வாய்ப்பை பிரகாசமாகிறது.
சசி தரூர் ஜாதகத்தில் ராகு கேது இரு கிரகங்களுமே ஒலி கிரகங்களான சந்திரன் மற்றும் சூரியன் பார்வை மற்றும் பலத்துடன் இருப்பதால் கோச்சாரத்தில் இருக்கும் ராகுவும் கேதுவும் சசிதரூருக்கு அதிகமான வாய்ப்பை பிரகாசிக்கிறார்கள்.
மேலும் பல சூட்சமங்களை வெளியில் சொன்னால் நம் ரகசியம் பறிபோகிவிடும் என்ற நல்ல எண்ணம் அடிப்படையில் வெளியே சொல்லாமல் நேரடியாக முடிவுக்கு வருகிறேன்.
எனது கணிப்பின்படி சசி தரூர் அவர்களே அடுத்த காங்கிரஸ் கட்சியின் தலைவராக வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.
இது எனது கணிப்பு மட்டுமே., விருப்பமோ , நிர்ப்பந்தமும் எதுவும் கிடையாது . யார் சொல்லியும் இந்த கணிப்பை வெளியிடவில்லை.
கடந்த சில நாட்களாக உலகியல் ஜோதிட ரீதியாக கிரிக்கெட் போட்டியை மட்டுமே கணித்தேன்,
அதில் ஏற்பட்ட சில அலுப்பு காரணமாக வேறு விஷயங்களை கணிக்கலாம் என கணிக்கும் பொழுது இதை கணித்தேனே தவிர யார் சொல்லியும் கணிக்கவில்லை.
இந்த கணிப்பு பலிக்குமா அல்லது தவறி போகுமா என்பதை நாளை மறுநாள் இரவு 9 மணிக்கு தெரிந்து கொள்ளலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.