தொகுதி மறுவரையறை குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் 3 மாநில முதல்வர்கள் உட்பட காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என மொத்தம் 20 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். who will be participating jac meet on delimatation
இதுதொடர்பாக திமுக எம்.எல்.ஏ எழிலன் தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று (மார்ச் 19) செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
மூன்று மாநில முதல்வர்கள் பங்கேற்பு! who will be participating jac meet on delimatation
அப்போது அவர், “முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பின் பேரில் தொகுதி மறுசீரமைப்பு குறித்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி கிராண்ட் சோழா ஹோட்டலில் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில், கேரளா முதல்வர் பினராயி விஜயன், கோவிந்த், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் கலந்துக்கொள்ள உள்ளனர்.
அவர்களுடன் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 20 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
தொகுதி எண்ணிக்கை குறையும்! who will be participating jac meet on delimatation
நம் நாட்டில் தொகுதி மறுவரையறை என்பது மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பிறகு நடக்கும். கடந்த 1951ல் ஒரு எம்.பி.க்கு 4.75 லட்சம் மக்கள் என்ற அடிப்படையில் 494 இடங்கள் இருந்தன.
அதன்பின், 1961 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின், 8.4 லட்சம் மக்களுக்கு ஒரு எம்.பி. என கணக்கிட்டு, 522 தொகுதிகள் வந்தன. அடுத்து, 1971ம் ஆண்டு ஒரு எம்.பிக்கு 10.1 லட்சம் பேர் இருந்ததால், 543 எம்.பிக்கள் இடம் வந்தன.
கடந்த 1976ம் ஆண்டு, தொகுதி மறுவரையறை பணியை, 25 ஆண்டுகள் தள்ளிவைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அடுத்து, 2001ம் ஆண்டு மறுவரையறை செய்ய வேண்டி இருந்தது.
அப்போது கருணாநிதி, சந்திரபாபு நாயுடு ஆகியோர், மறுவரையறையை தள்ளி வைக்கும்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில், 25 ஆண்டுகள் தள்ளி வைக்கப்பட்டது. அந்த அவகாசம் அடுத்த ஆண்டில் முடிகிறது.
எனவே, அடுத்த ஆண்டு தொகுதி மறுவரையறை எப்படி செய்யப் போகின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது நியாயமான கேள்வி. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகள் மட்டுமின்றி, பிற மாநில கட்சிகளும் இதை கோடிட்டுக் காட்டி உள்ளன.
தமிழகத்திற்கு இடங்கள் குறையாது என்கின்றனர். ஆனால், எத்தனை சதவீதம் ஏறும் என்று நாம் கேட்கிறோம்.
அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாடாளுமன்றத்தில் எம்.பி.,க்கள் மொத்த எண்ணிக்கை 848 இடங்களாக அதிகரிக்கப்பட்டால், உத்தரப்பிரதேசத்தின் இடங்கள் 80-ல் இருந்து 143 ஆகவும், பிஹாரில் 40-ல் இருந்து 79-ஆகவும், மத்திய பிரதேசத்தில் 29-ல் இருந்து 52-ஆகவும் அதிகரிக்கக் கூடும்.
ஆனால், தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை அதே அளவில் குறைவாகத்தான் இருக்கும். தென் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியிலும் பெரும் பாதிப்பு ஏற்படும்
உரிமைக்கான குரலை நாடாளுமன்றத்தில் ஒலிக்க நமது பிரதிநிதித்துவம் இருந்தால் தான் முடியும். இவற்றை உணர்ந்துதான் முதல்வர் களம் அமைக்கிறார். நியாயத்தை கேட்கிறார்” என எழிலன் தெரிவித்தார்.