வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வேட்டையன் படம் வெளியாகிறது. இந்த படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், சாபுமோன், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் என பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கும் மலையாள நடிகரான சாபுமோன் ரஜினியுடன் இணைந்து நடித்தது குறித்து பேசியுள்ளார்.
அதில், “படப்பிடிப்பின்போது இயக்குநர் ஞானவேல் என்னை ரஜினி சாரிடம் அறிமுகப்படுத்தினார். அப்போது ரஜினி சார், என்னை பார்த்து சார் என்று அழைத்தார். எனக்கு வியப்பாக இருந்தது. எவ்வளவு பெரிய நடிகர் , என்னை சார் என்று கூப்பிடுறாரே என்று பேச்சே வரவில்லை. பின்னர்,ரஜினி சார் என் தோளைத் தட்டிக்கொடுத்தார். இது எனக்கு தமிழில் முதல் படம் என்பதால் ‘வெல்கம் டு தி தமிழ் இண்டஸ்ட்ரி’ என்று புன்னகையுடன் கூறினார்.
சில நாள்கள் நாங்கள் சேர்ந்து நடித்திருந்தாலும் அவருடன் ஒரு புகைப்படம் கூட எடுக்கவில்லை. அவர் கூறிய வார்த்தைகள் எப்போதும் என் நினைவில் இருக்கும். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தது என வாழ்க்கையில் மறக்கமுடியாத நேரம் ” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
மலையாள நடிகரான சாபுமோன் மூன்று டிகிரி பெற்றவர். சட்டமும் படித்துள்ளார். சவுதி அரேபியாவில் லப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். நடிப்புத்துறை அவருக்கு பிடித்தது. எனவே, வேலையை கைவிட்டு நடிப்பில் இறங்கி விட்டார். முதலில் தொலைக்காட்சிகளில் சில தொடர்களில் நடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். பின்னர், 2002 ஆம் ஆண்டு முதல் மலையாள சினிமாக்களில் நடித்து வருகிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? – வானிலை மையம் அப்டேட்!