நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “லியோ” படம் இந்த மாதம் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இதன் காரணமாக இந்த அக்டோபர் மாதத்தை “LEO MONTH” என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
லியோ படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்து உள்ளது. லோகேஷ் கனகராஜின் டிரேட்மார்க்கான LCU படங்களில் லியோ படம் இணையுமா? இணையாதா? என்ற எதிர்பார்ப்போடு சினிமா ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
லியோ படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடல்களின் வரிகளை அலசி ஆராய்ந்து இந்த படம் நிச்சயம் LCU தான் என ரசிகர்கள் புது கதையை எழுதிக் கொண்டிருக்கின்றனர்.
இப்படி லியோ ஃபீவர் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்க, எந்த சத்தமும் இல்லாமல் தளபதி 68 படத்திற்கான வேலைகள் தொடங்கிவிட்டது.
தளபதி 68 படத்தின் பூஜை அக்டோபர் 2 ஆம் தேதி நடக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பூஜை முடிந்த அடுத்த நாளே அதாவது அக்டோபர் 3 ஆம் தேதியே படப்பிடிப்பைத் தொடங்கப் போவதாக சொல்லப்படுகிறது.
மேலும் தளபதி 68 படத்தின் ஹீரோயின் பற்றிய ஒரு அப்டேட்டும் சமூக வலைத்தளங்களில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.
ரவி தேஜாவின் கில்லாடி, விஜய் ஆண்டனியின் கொலை ஆகிய படங்களில் நடித்திருந்த நடிகை மீனாட்சி சவுத்ரி தான் தளபதி 68 படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறாராம்.
இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றாலும் தளபதி 68 -இல் மீனாட்சி சவுத்ரி நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக சிலர் கூறுகின்றனர்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
