கடந்த இரண்டு நாட்களாகவே உலக சோஷியல் மீடியா முழுக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கியும் வாக்குவாதம் செய்த வீடியோ காட்சிகள் தான் வலம் வருகின்றன. Who is this politician Zelensky?
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். Who is this politician Zelensky?

அப்போது, “ரஷ்யா உடனான போரை ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்று ஜெலன்ஸ்கியிடம் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் வலியுறுத்தினார்.
இதனால் ஜெலன்ஸ்கி கோபமடைந்தார். இதன் பின் அதிபர் டிரம்ப்புடனும் வாக்குவாதம் செய்தார். இந்த பேச்சுவார்த்தையானது சண்டையில் முடிந்தது. இதனால் வெள்ளை மாளிகையில் இருந்து கோபத்துடன் வெளியேறினார் ஜெலன்ஸ்கி . Who is this politician Zelensky?
ஜெலன்ஸ்கி – டிரம்ப் இடையே நடந்த இந்த சண்டை உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ஜெலன்ஸ்கிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அதேவேளையில், உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவின் உதவி என்பது உறுதியாக தேவை என்பது முழுமையாக உணர்ந்த ஜெலன்ஸ்கி, “அமெரிக்காவை அவமதிக்கும் வகையில் நான் எதையும் பேசவில்லை. அதேவேளையில், அமெரிக்காவின் உதவி இல்லாமல் நாங்கள் ரஷ்யாவை எதிர்கொள்வது கடினமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
யார் இந்த ஜெலன்ஸ்கி? Who is this politician Zelensky?
சோவியத் யூனியனில் அங்கமாக இருந்த, உக்ரேன் க்ரிவி ரிஹ் நகரில் 1978-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி வொலொடிமிர் ஒலெக்சாண்ட்ரோவிச் ஜெலன்ஸ்கி பிறந்தார்.
யூத குடும்பத்தைச் சேர்ந்த இவரது தந்தை ஒலெக்சாண்டர் ஜெலென்ஸ்கி, மற்றும் கிரிவி ரிஹ் தேசிய பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சைபர்நெடிக்ஸ் மற்றும் கணினி வன்பொருள் துறையின் தலைவராக இருந்தார். தாயார் ரிம்மா ஜெலென்ஸ்கா, ஓய்வு பெற்ற பொறியாளர். Who is this politician Zelensky?
கிரிவி ரி தேசிய பல்கலைக்கழகத்தில் ஜெலன்ஸ்கி சட்டம் பயின்றார். ஆனால், அவர் வழக்கறிஞராக பணியாற்றவில்லை.
கலைகளின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஜெலன்ஸ்கி, தனது 17-ஆவது வயதில் இருந்து காமெடி ஆர்ட்டிஸ்டாக நடிக்க ஆரம்பித்தார்.

நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் சோவித் யூனியன் நாடுகள் முழுவதும் ஜெலன்ஸ்கி மிக முக்கியமான ஒரு ஸ்டான்ட் அப் காமெடியனாக அறியப்பட்டார். தனது தனித்துவமான நடிப்பால் லட்சக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்தார் ஜெலன்ஸ்கி. ‘குவார்டல் 95’ என்ற நாடக குழுவை உருவாக்கி அன்றைய ஆட்சியாளர்களின் ஊழல், சமூக பிரச்சனைகள் தொடர்பாக பகடி செய்தார்.
2015-ஆம் ஆண்டில், “மக்களின் சேவையாளர்” என்ற தொலைக்காட்சி தொடரில், ஒரு பள்ளி ஆசிரியர் உக்ரைன் அதிபராக பொறுப்பேற்றால், என்ன நடக்கும் என்பதை மையக்கருவாக கொண்டு நடித்தார். இந்த தொடர் ஜெலன்ஸ்கிக்கு அரசியல் வெளியில் புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தி தந்தது. பல இளைஞர்களும் ஜெலன்ஸ்கியை நோக்கி படையெடுக்க தொடங்கினர். Who is this politician Zelensky?
இதனால், 2018-ஆம் ஆண்டு ஜெலன்ஸ்கி, ’சர்வண்ட் ஆஃப் தி பீப்பிள்’ என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். தனது நாடகத்தின் பெயரிலேயே ஜெலன்ஸ்கி கட்சி தொடங்கினார்.
அவ்வருடத்தின் டிசம்பர் 31-ஆம் தேதி அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக ஜெலன்ஸ்கி அறிவித்தார். இதை சற்றும் எதிர்பாராத அன்றைய உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ ஆடிப்போனார்.
பொதுக்கூட்டம், நடைபயணம் என்றில்லாமல் சோஷியல் மீடியாக்கள் மூலமாகவும், ஸ்டாண்ட் அப் காமெடி மூலமாகவும் வித்தியாசமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ஜெலன்ஸ்கி. அதிபர் பெட்ரோவின் ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல்களையும், அமைச்சர்களின் ஊழல்களையும் நாடகங்கள் மூலம் அரங்கேற்றினார்.
அவரது பிரச்சாரத்திற்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிடைப்பதை உணர்ந்த பெட்ரோ, ஜெலென்ஸ்கியின் வெற்றி ரஷ்யாவுக்கு தான் பயனளிக்கும் என்று குற்றம்சாட்டினார்.

பல தடைகளை தாண்டி, 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜெலன்ஸ்கி வெற்றி பெற்றார். மே 20-ஆம் தேதி உக்ரைன் அதிபராக ஜெலன்ஸ்கி பதவியேற்றார். இதனால் உக்ரைன் அதிபராக பதவியேற்ற முதல் யூதர் என்ற பெருமையை பெற்றார் ஜெலன்ஸ்கி.
1990-ஆம் ஆண்டு வரை உக்ரைன் நாடானது சோவித் யூனியனின் ஓர் உறுப்பு நாடாக தான் இருந்தது, சோவித் சிதைந்தபோது, சுதந்திரம் பெற்று தனி நாடாக புதிய அரசமைப்பு சட்டத்தோடு இயங்கி வருகிறது.
ஆனால், ரஷ்யாவோ உக்ரைனை தனது நட்பு நாடாகவோ, முழு சுதந்திர நாடாகவோ பார்க்க விரும்பவில்லை. தங்களது காலனி நாடாக இருக்கவே விரும்பியது.
இதனால், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளுடன் இணக்கமான நட்புறவை பேணினார் அதிபர் ஜெலன்ஸ்கி. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு முயற்சிகள் எடுத்தார். இதனால், ஆத்திரமடைந்த ரஷ்ய அதிபர் புதின் 2022-ஆம் ஆண்டு உக்ரைனுக்கு எதிராக போர் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக உலகின் சக்தி வாய்ந்த ரஷ்யாவை, ’தம்மா துண்டு ஆங்கர் தாண்டா அவ்வளவு பெரிய கப்பலையே நிறுத்துது’ என்ற வட சென்னை டயலாக் பாணியில் எதிர்த்து வருகிறார் ஜெலன்ஸ்கி.

இந்திய பிரதமர் மோடி முதல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரை ஒவ்வொரு நாட்டு அதிபரையும் சந்தித்து உக்ரைனுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
ஜோ பைடனின் ஆட்சியில் வலுவாக உருவான அமெரிக்கா – உக்ரைன் கூட்டணி தற்போது டொனால்ட் டிரம்ப் ஆட்சியில் உடைந்துள்ளது.
இந்த கூட்டணியில் ஏற்பட்டுள்ள முறிவு, ஐரோப்பிய நேட்டோ உறுப்பினர்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நெருக்கடி ஏற்பட்டு வருவதையே காட்டுகிறது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மீதான அமெரிக்காவின் இந்த அணுகுமுறைக்கு ஆதரவு தெரிவித்தார். இதை ஜெலன்ஸ்கி எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. Who is this politician Zelensky?