ADVERTISEMENT

தீபாவளி ரேஸில் அதிக வசூல் செய்தது யார்? – இயக்குநர் தெரிவித்த அதிர்ச்சி கருத்து!

Published On:

| By christopher

who is the winner of diwali release in tamil

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 17ஆம் தேதி பிரதீப் ரங்கநாதனின் ‘ட்யூட்’, துருவ் விக்ரமின் ‘பைசன் – காளமாடன்’ மற்றும் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ ஆகிய மூன்று தமிழ்ப் படங்கள் ரிலீஸானது.

மூன்று படங்களுமே ரசிகர்களிடம் இருந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்ற நிலையில் மூன்று நாள் வசூல் நிலவரப்படி ட்யூட் முதலிடத்தில் உள்ளது.

ADVERTISEMENT

கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ட்யூட் நகைச்சுவை மற்றும் காதல் கதையால் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, கடந்த 3 நாட்களில் உலகம் முழுவதும் 66 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக இன்று (அக்டோபர் 20) அறிவிக்கப்பட்டுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஷ்வரன், ரெஜிஷா விஜயன் நடித்துள்ள பைசன் காளமாடன் திரைப்படம் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. இது முதல் நாளில் சற்று மெதுவாகத் தொடங்கினாலும், வார இறுதி நாட்களில் நல்ல விமர்சனங்களால் வசூலில் முன்னேற்றம் கண்டுள்ளது. அப்படம் கடந்த மூன்று நாட்களில் ரூ.20 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

அதே வேளையில் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் வெளியான டீசல், மற்ற இரண்டு படங்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவான வசூலையே ஈட்டியுள்ளது.

இதுதொடர்பாக சமூகவலைதளங்களில் வெளியான தகவலுக்கு பதிலளித்து டீசல் பட இயக்குநர் சண்முகம் முத்துசாமி வெளியிட்ட பதிவில், “எமக்கு ஒதுக்கப்பட்டவை 100 + திரையரங்குகள் மட்டுமே… அதில் பல காலாவதியான திரையரங்குகள் அடங்கும் என்பதையும் சேர்த்து சொல்லியிருக்கலாம்” என பகீர் தகவலை சற்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
https://twitter.com/shan_dir/status/1980115470205477104
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share