தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் ஒன்பது தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் என்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.
இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடந்த பிறகு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தமிழக பிரமுகர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
திமுக- காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கும்போதே திருவள்ளூர் தனி தொகுதியை தங்கள் வசம் தருமாறு திமுக, காங்கிரசிடம் கோரிக்கை வைத்தது.
‘தற்போதைய திருவள்ளூர் எம்பி யாக இருக்கும் ஜெயக்குமாருக்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயும் மக்களிடையேயும் அதிருப்தி நிலவுவதால், நீங்கள் திருவள்ளூரை திமுகவிடம் கொடுத்து விடுங்கள்’ என திமுக தரப்பு கேட்டது. ஆனால் சோனியா வரை தனக்குள்ள நெருக்கத்தை பயன்படுத்தி மீண்டும் திருவள்ளூர் காங்கிரசுக்கே ஒதுக்கி வைத்தார் ஜெயக்குமார்.
ஆனால் இப்போது திருவள்ளூரில் விருப்ப ஓய்வு பெற்று காங்கிரஸ் கட்சிக்கு வந்து சமூக தளங்களில் ஒருங்கிணைப்பு பணியை செய்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயக்குமாருக்கு எதிராக திருவள்ளூர் தொகுதியில் இருக்கும் காங்கிரஸ் சீனியர்கள் சசிகாந்த் செந்திலுக்கு சீட்டு கொடுத்தால் தாங்கள் செலவு செய்ய தயாராக இருப்பதாக டெல்லியில் அமர்ந்து ஜெயக்குமாருக்கு எதிராக லாபி செய்தார்கள்.
அதேநேரம் ஜெயக்குமார் மீண்டும் எம்பி சீட் பெற தீவிர முயற்சியெடுத்து வருகிறார்.
திருவள்ளூர் தொகுதி ஜெயக்குமாருக்கா அல்லது சசிகுமார் செந்திலுக்கா என்ற கேள்வி வலிமையாக எழுந்துள்ளது.
-வேந்தன்
’வரும் மார்ச் 31 ஞாயிறு வேலைநாள் தான்’ : வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவு!
Ilaiyaraaja Biopic: வசனம்லாம் தெறிக்குமே… திரைக்கதை யாரு எழுதுறான்னு பாருங்க!