இந்திய வரலாற்றில் முதன்முறையாக, மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை குறித்து இரண்டு பெண் அதிகாரிகள் விளக்கமளித்தனர். who is Sofiya Qureshi and Vyomika Singh
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள ஒன்பது பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது ஆப்ரேஷன் சிந்தூர் என்ற குறியீட்டு பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 தீவிரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
இதுதொடர்பாக இந்திய அரசு சார்பில் இன்று (மே 7) விளக்கமளிக்கப்பட்டது.
முதலில் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி பாகிஸ்தான் மீது தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது என்பதை விவரித்தார்.
அவரைத்தொடர்ந்து இந்திய ராணுவத்தைச் சேர்ந்த கர்னல் சோபியா குரேஷி மற்றும் இந்திய விமானப்படையைச் சேர்ந்த விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரு பெண் அதிகாரிகள் தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது, முதலில் எந்த தீவிரவாத முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, என்ன நடந்தது, ராணுவம் என்ன செய்தது, விமானப்படை என்ன செய்தது என விரிவாக வீடியோ வெளியிட்டு விளக்கமளித்தனர்.
இதன் காரணமாக கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரு பெண் அதிகாரிகள் மக்களின் கவனத்தை ஈர்த்தனர். இணையங்களில் இருவரும் யார் என்ற கேள்வியும் எழுந்தது.
சோபியா குரேஷி யார்? who is Sofiya Qureshi and Vyomika Singh

கர்னல் சோபியா குரேஷி குஜராத்தைச் சேர்ந்தவர். 1999 இல் ஷார்ட் சர்வீஸ் கமிஷன்(குறுகிய சேவை ஆணையம்) கீழ் ராணுவத்தில் சேர்ந்தார். அப்போது அவருக்கு 17 வயதுதான். இவரது குடும்பமும் ராணுவ பின்னணியைக் கொண்டது.
இவரது கணவரும் இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை பிரிவில் பணியாற்றி வருகிறார்.
2006 ஆம் ஆண்டு காங்கோவில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கையிலும் பணியாற்றினார். ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
2016 ஆம் ஆண்டில் லெப்டினன்ட் கர்னல் சோபியா குரேஷி, ஆசியான் பிளஸ் பன்னாட்டு களப் பயிற்சியான ஃபோர்ஸ் 18 இல் இந்திய ராணுவப் பயிற்சிப் பிரிவை வழிநடத்திய முதல் பெண் அதிகாரியாக வரலாறு படைத்தார். அப்போது அவருக்கு வயது 35. அந்த பயிற்சியில் பங்கேற்ற அனைத்து நாடுகளில் இருந்தும் கலந்துகொண்டவர்களில் ஒரே ஒரு பெண் அதிகாரி இவர்தான்.
இவரது தலைமையிலான ‘உடற்பயிற்சிப் படை 18’ பயிற்சித் திட்டம் இதுவரை இல்லாத மிகப்பெரிய வெளிநாட்டு ராணுவப் பயிற்சியாகும். இதில், இந்தியா, ஜப்பான், சீனா, ரஷ்யா, அமெரிக்கா, கொரியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கலந்துகொண்டன.
ராணுவத்தின் சிக்னல் கார்ப்ஸின் அதிகாரியான சோபியா குரேஷி, ராணுவத்தின் உயர் பதவிகளில் பாலின சமத்துவம் குறித்து 2020 ஆம் ஆண்டு வெளியான தீர்ப்பில் உச்ச நீதிமன்றத்தால் சிறப்பிக்கப்பட்ட 11 பெண் அதிகாரிகளில் ஒருவர்.
வியோமிகா சிங் யார்?who is Sofiya Qureshi and Vyomika Singh

‘வியோமிகா’ என்ற அவரது பெயரின் அர்த்தம் ‘வானத்தில் வசிப்பவள்’ என்பதாகும். தனது 6 ஆம் வகுப்பு முதலே விமானப் படையில் சேரும் ஆர்வம் கொண்டவர்.
விமானப்படையில் பெண்கள் அதிகம் பணியாற்றுவதில்லை என்பதை அறிந்த வியோமிகா, எப்படியாவது விமானப்படையில் சேர்ந்துவிட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார்.
2004ல் நடந்த ஷார்ட் சர்வீஸ் கமிஷன் கீழ், இந்திய விமானப் படையில் நியமிக்கப்பட்டார். இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் விமானியானார். இந்திய ராணுவத்தின் சிறந்த விங் கமாண்டர்களில் ஒருவராக வியோமிகா அறியப்படுகிறார்.
போர் ஹெலிகாப்டர்களை இயக்குவதில் சிறந்த அனுபவம் உள்ளது. சீட்டா, சேதக் போன்ற போர் ஹெலிகாப்டர்களை இயக்கியுள்ளார். 2500-க்கும் மேற்பட்ட மணி நேரங்களை பறக்கும் அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
2021ல் இமாச்சலப் பிரதேசத்தின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றான மணிராங் மலையில் ஏறிய விமானப் படையின் பெண்கள் பிரிவின் ஒரு பகுதியாக இருந்த வியோமிகா சிங் தனது உறுதியையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தினார்.
இந்தசூழலில் வியோமிகா சிங்கும், சோபியா குரேஷியும் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பிறகு அதிகளவு பேசப்படுகின்றனர். who is Sofiya Qureshi and Vyomika Singh
