விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் படத்திற்கு இசை இவரா?

Published On:

| By christopher

who is music director of vjs pjn movie?

’விஜய் சேதுபதி உடன் தெலுங்கு சினிமா இயக்குனர் பூரி ஜெகன்நாத் இணைகிறாரா’ என்ற கேள்வி தென்னிந்திய சினிமா வட்டாரத்தைச் சேர்ந்த பலரை புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. who is music director of vjs pjn movie?

தம், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, போக்கிரி என்று தமிழில் ஹிட் அடித்த சில படங்களை தெலுங்கில் தந்தவர் பூரி என்பது தமிழ் ரசிகர்களில் பலர் அறியாதது. அல்லு அர்ஜுன், ராம்சரண், ஜுனியர் என்.டி.ஆர்., பிரபாஸ் என்று பலர் இவருடன் இணைந்து ‘கமர்ஷியல் ஹிட்’ கொடுக்கக் காத்திருந்த காலமொன்று உண்டு.

அடுத்தடுத்து தோல்விகளைத் தந்தாலும் சட்டென்று ஒரு ‘பிளாக்பஸ்டர்’ படம் தந்து ஒட்டுமொத்த கவனத்தையும் வாரிச் சுருட்டிக் கொள்வது பூரி ஜெகன்னாத்திற்கு கைவந்த கலை. அதனாலேயே, ‘கதை கேட்டு பிடித்துப் போனதும் ஒப்புக்கொண்டேன்’ என்று விஜய் சேதுபதி சொன்னதாக ஒரு தகவல் தமிழ் திரையுலகில் உலவுகிறது.

இந்த படத்தில் இந்தி நடிகை தபு, கன்னட நடிகர் துனியா விஜய், ‘போராளி’யில் அறிமுகமான நிவேதா தாமஸ் உட்படப் பலர் அடுத்தடுத்து ‘புக்’ ஆகி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில், ‘இப்படியொரு கமர்ஷியல் படத்தில் இசையமைப்பாளர் யார்’ என்ற கேள்வி எழுவது இயல்பு.

அதற்கு, மஹதி ஸ்வர சாகர் இப்படத்திற்கு இசையமைக்கப் போவதாகவும், வெகு விரைவில் இது பற்றிய அறிவிப்பு வரும் எனவும் படக்குழுவினர் சார்பில் பதில் சொல்லப்பட்டிருக்கிறது.

மஹதி வேறு யாருமல்ல, இசையமைப்பாளர் மணி சர்மாவின் மகன். பீஷ்மா, கிருஷ்ணா விருந்த விஹாரி, போலா சங்கர், ரக்‌ஷனா உட்படச் சுமார் 20 படங்களுக்கு இசையமைத்தவர்.

2கே கிட்ஸ்களுக்கு பிடித்த இசையமைப்பாளர் வரிசையில் மஹதிக்கு இடமுண்டா என்பது பூரி ஜெகன்னாத் – விஜய் சேதுபதி படத்தின் அறிவிப்பு வெளியாகும்போதே வெளிச்சமாகிவிடும்..

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share