யார் இந்த மணத்தி கணேசன்… பைசன் படத்தின் கதைதான் என்ன?

By Kumaresan M

|

Published on 8 Mar 2025, 3:15 PM

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் நடித்துள்ள ’பைசன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடித்துள்ள படம்தான் பைசன். இந்த படத்தில் ரஜிஷா விஜயன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர். who is Manathi Ganesan?

பசுபதி, லால், அழகம் பெருமாள் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். முன்னதாக, மாரி செல்வராஜ் முந்தைய படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் அல்லது ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இசையமைப்பார்கள். முதல் முறையாக மாரி செல்வராஜ் படத்தில் நிவாஸ் கே பிரசன்னா இசையை கையாண்டுள்ளார்.

ADVERTISEMENT

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வித்தியாசமான லுக்கில் துருவ் காட்டப்பட்டுள்ளார். வழக்கமாக துருவ் விக்ரம் என்ற பெயரில் விக்ரம் பெயரையும் சேர்த்து போடப்படும். ஆனால் இந்த படத்தில் விக்ரமின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கபடி வீரராக துருவ் நடித்துள்ளார்.

இதற்கிடையே, மாரி செல்வராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் எங்கிருந்து வருகிறேன் என்று உனக்கு தெரியும், ஏன் வருகிறேன் என்றும் உனக்கு தெரியும், வந்து சேர்ந்தால் என்ன செய்வேனென்றும் உனக்கு தெரியும். ஆதலால், நீ கதவுகளை அடைக்கிறாய் நான் முட்டிமோதி மூர்க்கமாய் உடைக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். who is Manathi Ganesan?

ADVERTISEMENT

பைசன் படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த படத்தில் நடிக்க துருவுக்கு மணத்தி கணேசனே கபடி பயிற்சி அளித்ததாகவும் சொல்கிறார்கள்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kumaresan M

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel