ஆணாதிக்க ஆட்டோமொபைல் துறையை ஆட்டி படைக்கும் முதல் பெண்… யார் இந்த லட்சுமி?

Published On:

| By Kumaresan M

தமிழகத்தில் பல முன்னணி தொழிற்சாலைகள் அமைந்திருந்தாலும் அதில் மிக முக்கியமானது டி.வி.எஸ் குரூப். தற்போது, இந்த குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.17,222 ஆயிரம் கோடி.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகாவிலுள்ள திருக்குறுங்குடி என்ற சிறிய கிராமத்தில் பிறந்த திருக்குறுங்குடி வெங்கராம் சுந்தரம் ஐயங்காரால் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக மாறியுள்ளது. who is lakshmi venu?

மதுரையில் கடந்த 1911 ஆம் ஆண்டு முதன் முதலில் டி.வி.எஸ் குழுமம் தொழிலை தொடங்கியது.  T. V. Sundram Iyengar and Sons Limited என்பதுதான் இந்த நிறுவனத்தின் முதல் பெயர். பேருந்துகள் , லாரிகளை முதன் முதலில் தென்னகம் முழுவதும் இயக்கியது. பின்னர், படிப்படியாக மோட்டார் தொழிலில் இறங்கியது. தற்போது பைக் முதல் டிராக்டர் வரை என பல்வேறு ரக வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. உலகம் முழுக்க இந்த நிறுவனத்தில் 60 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்..who is lakshmi venu?

பொதுவாக, ஆட்டோமொபைல் துறை ஆண்கள் ஆதிக்கம் நிறைந்தது. ஆனால், தற்போது டி.வி.எஸ் நிறுவனத்தை லட்சுமி வேணு என்ற பெண் நிர்வகித்து வருகிறார் என்பதுதான் சிறப்பம்சம். இவர், டி.வி.எஸ். குழும தலைவர் வேணுசீனிவாசனின் மகள் ஆவார். கடந்த 2010 ஆம் ஆண்டு டி.வி.எஸ். குழுமத்தில் இணைந்த இவர், 2022 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டராக உயர்த்தப்பட்டார். பிரிட்டனிலுள்ள வார்விக் பல்கலையில் இன்ஜீனியரிங் மேலாண்மை படித்துள்ள லட்சுமி, 2018 ஆம் ஆண்டு மகேஷ் கோகினேனியை மணந்தார். who is lakshmi venu?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share