புற்று நோய் தாக்கியுள்ளது என்ற வார்த்தையை கேட்டாலே பலரும் அழுதே விடுவார்கள், அல்லது பயத்தாலேயே பாதி மரணித்து விடுவார்கள். ஆனால், மரணத்தையும் மாபெரும் கொண்டாட்டமாக மாற்றி விட முடியுமென்பதற்கு ஷிகான் ஹூசைனிதான் உதாரணம். புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹூசைனி தரமணியிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சையில் இருந்து வந்தார்.
மருத்துவமனையிலுள்ள அவரின் அறையில் நோயாளிக்குரிய அடையாளங்கள் குறைவாகவே காணப்பட்டது. அந்த அறையில் விரக்திக்கே இடம் இல்லை. தினமும் மாணவர்களுடன் சந்திப்பு தன்னை தேடி வருபவர்களுடன் உரையாடல் , இடை இடையே கிட்டார் வாசிப்பு, நண்பர்களை கிட்டார் வாசிக்க சொல்லி கேட்பது என்று மரணத்தையும் ஜாலியாகவே எதிர்கொண்டு எமனிடத்தில் போய் சேர்ந்து விட்டார் மாஸ்டர்.
மதுரையை பூர்வீகமாக கொண்ட ஷிஹான் ஹுசைனி இயக்குநர் கே.பாலசந்தர் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். புன்னகை மன்னன் படத்தில் இலங்கை தமிழராக சிறிய வில்லன் வேடத்தில் ஹூசைனி நடித்திருந்தார். அதை தொடர்ந்து, வேலைக்காரன், மூங்கில் கோட்டை என பல படங்களில் நடித்திருந்தார். விஜய்யின் பத்ரி படத்தில் அவருக்கு உடற்பயிற்சியாளராகவும் நடித்திருந்தார். நடிகர் ரஜினிகாந்துடன் ப்ளட்ஸ்டோன் என்கிற ஆங்கில படத்தில் பணியாற்றியிருக்கிறார்.who is karate Shihan Hussaini?
ஆனால்,கராத்தேயும் வில்வித்தையும்தான் ஹூசைனிக்கு உயிர். வில்வித்தைக்கு தமிழகத்தில் உலகத் தரத்திலான பயிற்சி மையம் அமைக்க வேண்டுமென்பதுதான் அவரின் வாழ்க்கையின் ஒரே லட்சியம். ஆனால், கடைசி வரை அது கைகூடவில்லை என்பதுதான் சோகத்திலும் சோகம்.
தமிழகத்தில் ஒரு வில் வித்தை மையம் அமைப்பதற்காக, தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கவர அவர் செய்த காரியங்கள் சிலவற்றை பார்க்கலாம்.
ஒரு முறை தனது வலது கையில், 101 கார்களை ஏற்ற வைத்த ஹுசைனி, அதே கையால் 5 ஆயிரம் டைல்ஸ் மற்றும் 1000 செங்கல்களை உடைத்தார். அப்போது, தனது கையில் வந்த ரத்தத்தை கொண்டு ஜெயலலிதாவின் உருவத்தை வரைந்தார்.
உறைந்த தனது ரத்தத்தை பயன்படுத்தி ஜெயலலிதாவின் மார்பளவு சிலையை உருவாக்கினார். இதற்காக 11 லிட்டர் ரத்தம் தான் உள்பட பலர் தானமாக தந்ததை பயன்படுத்தியிருந்ததாக அவர் கூறியிருந்தார்.
அப்போது, பலரும் ஜெயலலிதாவிடம் ஆதாயம் பெறுவதற்காக ஹூசைனி இப்படியெல்லாம் செய்வதாக குற்றம் சாட்டினர். ஆனால், ஜெயலலிதா மேலான தனது அன்பு உறுதியானது என்று அவர்களுக்கு பதில் சொன்னார் ஹூசைனி. கடந்த 2005-ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் 56-வது பிறந்த நாளை முன்னிட்டு, தனது ரத்தத்தால் 56 ஜெயலலிதா ஒவியங்களை வரைந்தார். இதற்காக, 1,500 மில்லி லிட்டர் ரத்தத்தை பயன்படுத்தியதாக அவர் தெரிவித்திருந்தார்.

உச்சக்கட்டமாக, 2015 பிப்ரவரி மாதத்தில் ‘அம்மா’ என்று எழுதப்பட்ட ஒரு டி-சர்ட்டை அணிந்து கொண்டு சிலுவையில் அறைந்துகொண்டார். தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெறவேண்டி பிரார்த்தனை செய்து கொண்டு இப்படி தன்னை வருத்திக் கொண்டார்.
சிலுவையில் இவரை நிற்க வைத்து இவரது கூட்டாளிகள் ஆறு அங்குல ஆணிகளை இரு கைகளிலும் அறைந்தனர். சிலுவையில் இப்படி 6 நிமிடங்கள் தொங்கினார். பின்னர்,நான்கு ஆணிகளையும் மெதுவாக வெளியே எடுத்த பிறகு, அவருக்காக காத்திருந்த ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். அப்போது, இவரின் செயலை பலரும் முட்டாள்தனம் என்று கடுமையாக சாடினர்.who is karate Shihan Hussaini?
இந்த சமயத்தில் அவரை அன்புடன் கண்டித்த ஜெயலலிதா, இனிமேல் அப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று அறிவுரை வழங்கினார். நடிகர்கள் விஜய், பவன் கல்யாண் உள்ளிட்டோருக்கும் தனது பயிற்சி மையத்தில் ஹுசைனி கராத்தே பயிற்சி அளித்தார். இந்த நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு அவர் தன்னை புற்றுநோய் தாக்கியிருப்பதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ‘இந்த தகவல் பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது.

அதில் ‘என்னை ரத்த புற்றுநோய் தாக்கியுள்ளது. ஜெனடிக், வைரஸ் அல்லது வேறு ஏதாவது காரணத்தால் புற்று நோய் என்னை தாக்கியிருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். நான் ஒருநாள் வாழ்வதற்கு 2 யூனிட் ரத்தம் மற்றும் பிளெட்லெட்ஸ் வேண்டும். இன்னும் கொஞ்ச நாள்தான் உயிரோடு இருப்பேன். எனக்கு மன தைரியம் அதிகம்.
அதனால், நான் கராத்தே சொல்லிக்கொடுக்கும் இடத்தை விற்க முடிவு செய்துள்ளேன். பவன் கல்யாண் இங்கு வந்துதான் கராத்தே கற்றுக்கொண்டார், எனவே அவர் இந்த இடத்தை வாங்கிக்கொள்ள வேண்டும். நடிகர் விஜய்க்கும் ஒரு கோரிக்கை வைக்கிறேன். தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான வில்வித்தை வீரர்- வீராங்கனைகளை உருவாக்க வேண்டும்’ என்று உருக்கமாக கூறியிருந்தார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த அவருக்கு தமிழக அரசு தரப்பில் இருந்து 5 லட்சம் உதவித்தொகை அளிக்கப்பட்டது. இதற்கான செக்கை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார். அதன் பிறகு மிக உறுதியாக உரத்த குரவில் பேசி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார் , ‘ துணை முதல்வர் உதயநிதி யாருக்கும் தெரியாமல் அளித்த நிதியுதவி மனதை தொட்டு விட்டது. நீங்கள் அற்புதமான மனிதர் என்பதை உணர்த்திவிட்டீர்கள். உதவி செய்ததை வைத்து மலிவு அரசியல் செய்யாமல், ஒரு மனிதனின் தேவையை உணர்ந்து உதவி செய்ததற்கு நன்றி.who is karate Shihan Hussaini?
என்னை எல்லாரும் அதிமுகவை சேர்ந்தவராகத்தான் அறிந்திருப்பார்கள். ஆனால், நான் உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். நான் அதிமுகவில் ஒரு முறையாவது உறுப்பினராக இருந்தேன் என்று யாராவது ஆதாரம் காட்ட முடியுமா?
இந்த சூழலில் நான் ஒரு உண்மையை பேச விரும்புகிறேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது எனக்கு மரியாதை உண்டு. அதற்கு வேறு காரணங்கள் உண்டு. ஒரு கராத்தே டீச்சராக அவரின் துணிவு எனக்கு மிகவும் பிடித்தமானது. இதுதான் முற்றிலும் தவறாக உணர்ந்துக் கொள்ளப்பட்டது. நான் எனது ரத்தத்தால் அவரது ஓவியங்களை உருவாக்கியது அவரின் ரசிகன் என்பதாலோ அல்லது அவரின் கட்சியை சேர்ந்தவர் என்பதாலோ அல்ல.
பல முறை தமிழகத்தில் வில் வித்தை மையம் அமைக்க வேண்டுமென்று முயற்சித்தேன். அதற்கான, கதவுகள் அடைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. ஒரு கராத்தே, வில்வித்தை குருவாக அதை உருவாக்கவே பல முறை என்னை நான் வருத்திக் கொண்டேன். 2004 ஆம் ஆண்டு அவரின் பிறந்த நாளை முன்னிட்டு 56 ஓவியங்களை ரத்தத்தால் வரைந்தேன். ‘டியர் மாம் கிவ் மீ சம் லேண்ட் ‘ என்று ரத்தத்தால் எழுதி அவரிடத்தில் வேண்டினேன். அன்றைய தினம் மாலையே என்னை அழைத்த ஜெயலலிதா பெசன்ட் நகரில் நிலம் தருவதாக வாக்களித்தார்.
ஆனால், ஆர்டர் வந்த பிறகு பார்த்தால் கோயம்பேட்டில் அரை கிரவுண்ட் நிலம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. உலகத்தரமான வில் வித்தை மையத்தை அரை கிரவுண்ட் நிலத்தில் அமைக்க முடியுமா? இது எவ்வளவு முட்டாள்தமானது. இந்த அதிகாரிகளுக்கு கொஞ்சமாவது வில் வித்தை பற்றி தெரியுமா?
உடனே, ஜெயலலிதாவை மீண்டும் சந்திக்க முயற்சித்தேன். என்னால் முடியவில்லை. ஒரு ஆண்டுகள் இரு ஆண்டுகள் இல்லை. 10 ஆண்டுகளாக முயற்சித்தேன். மன்னார்குடி மாபியாக்கள் அதை தடுத்துக் கொண்டிருந்தனர். உறைந்த ரத்தத்தால் ஆன அவரின் உருவத்தை உருவாக்கினேன். சிலுவையிலும் அறைந்து கொண்டேன். மீடியாக்களில் செய்தி வெளியான, பின்னர், 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி என்னை அழைத்து நிலமும் கட்டுமானத்துக்காக பணமும் ஜெயலலிதா கொடுத்தார். ஜெயலலிதாவின் கவனத்தை பெற்றாவது ஒரு வில்வித்தை மைதானத்தை தமிழ்நாட்டில் அமைத்து விடவே என்து ரத்தத்தை சிந்தினேன். சிலுவையில் அடித்துக் கொண்டேன் தமிழ்நாட்டில் அதிமுகவால் 31 ஆண்டு காலம் அலைக்கழிக்கப்பட்டவன் நான் ‘ என்று கூறியுள்ளார்.

ஒரு வில் வித்தை மையம் அமைக்க தன் வாழ்நாள் முழுவதும் போராடி வந்த ஹூசைனி 24 ஆம் தேதி இரவு அந்த ஆசை நிறைவேறாமலேயே மருத்துவமனையில் இறந்தார். அவர் தனது உடலை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தானம் செய்துள்ளார். மேலும், தன் இதயத்தை மட்டும் பாதுகாக்க வில்வித்தை – கராத்தே மாணவர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.who is karate Shihan Hussaini?
ஏனென்றால், கடைசி வரை ஹூசைனியை அவரின் மாணவர்கள்தான் பார்த்துக் கொண்டனர். கடைசி விநாடி வரை உடன் இருந்து உணவு ஊட்டுவது முதல் அனைத்து பணி விடைகளையும் செய்து கொண்டுதான் இருந்தனர். தன் மாணவர்களின் அன்பு அவருக்குள் இருந்த சோகத்தையும் குறைத்தது.
ஹூசைனியின் மாணவி காம்னா என்ற வில்வித்தை வீராங்கனை அவரின் கடைசி நிமிடங்கள் பற்றி கூறுகையில், ‘கடந்த 8 ஆண்டுகளாக அவருடன் பயணிக்கிறேன். வில்வித்தை மட்டுமல்ல, வாழ்க்கையின் அனைத்து விஷயங்களையும் அவர் கற்றுக் கொடுத்தார். தமிழகத்தில் வில்வித்தைக்கு ஒரு மைதானத்தை அமைக்க வேண்டுமென்பதுதான் அவரின் ஆசையாக இருந்தது.
அடிக்கடி மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தாலும் மீண்டு வந்துடுவாரு. ஆனால், இந்த முறை அது நடக்கல. வலி இருந்தாலும் காட்டிக் கொண்டதில்லை. ஆனால், நேற்றிரவு திடீரென்று மூச்சு விட முடியாமல் நிறைய இருமல் வந்தது. முடிவில அப்படியே உயிர் போயிட்டு. ஆனால், நாங்கள் எங்கள் குருவின் ஆசையை கண்டிப்பாக நிறைவேற்றுவோம். என் மூலமோ அல்லது நான் பயிற்சி அளிக்கும் வீராங்கனைகள் மூலமாகவோ அவருடைய நினைவாக வில் வித்தையில் ஒலிம்பிக்கில் பதக்கம் கண்டிப்பாக வெல்வோம் ‘ என்று உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.who is karate Shihan Hussaini?
வாழ்ந்த போதும் சரி மரணித்த போதும் சரி … வலி வேதனையால் துவண்டு விட மாட்டேன் என்று நிரூபித்து சென்றுள்ளார் ஹூசைனி.