ஆஸ்கர் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் தனது மனைவியுடன் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் மர்மம் இன்னும் விலகவில்லை.
ஜீன் ஹாக்மேன், தி பிரெஞ்சு கனெக்சன் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்காகவும், அன்ஃபர்கிவென் திரைப்படத்தில் சிறந்த துணை நடிகருக்காகவும் என இரண்டு முறை ஆஸ்கர் விருதுகளைப் பெற்றவர்..who is Gene Hackman?
தற்போது 95 வயதான ஜீன் ஹாக்மேனும் அவரது மனைவியான 65 வயதான பெர்சியும் அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்திலுள்ள சாந்தா ஃபே என்ற நகரத்தில் வசித்து வந்தனர். கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி அவர்கள் இருவரும் தங்கள் வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் வளர்த்து வந்த நாயும் வீட்டுக்குள் இறந்து கிடந்தது.
மரணத்தில் சந்தேகம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என போலீசார் கூறியுள்ளனர். அதே வேளையில், கார்பன்டை மோனாக்ஸைடு கசிவு வீட்டில் ஏற்பட்டு ஜீன் ஹாக்மேன் மனைவியுடன் இறந்து போனதாக சமூகவலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.
தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது. ஹாக்மேன் வளர்த்து வந்த 3 நாய்களில் ஒன்று இறந்து கிடந்துள்ளது. மற்ற இரு நாய்களும் உயிருடன் இருக்கின்றன. இந்த தம்பதியின் இறப்பில் மர்மத்தை விலக்க போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். who is Gene Hackman?
கலிபோர்னியாவில் 1930 ஆம் ஆண்டு பிறந்த ஹாக்மேன் அமெரிக்க மரைன் போலீசில் பணி புரிந்தார். பின்னர்,ஹாலிவுட் படங்களில் நடித்து அவரது தலைமுறை காலத்தில் மிகச்சிறந்த நடிகராக ஹாக்மேன் வலம் வந்தார். 1964 ஆம் ஆண்டு any wednesday என்ற படத்தில் ஹாக்மேன் ஹாலிவுட்டில் அறிமுகமானார்.
தொடர்ந்து, கிட்டத்தட்ட 100 படங்கள், டெலிவிஷன் தொடர்களில் நடித்துள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு பிரெஞ்சு கனெக்ஷன் படத்துக்கு பிறகு அவர் படங்களில் நடிப்பதைநிறுத்தி விட்டார். சாந்தாபே நகரிலுள்ள வீட்டில் தம்பதி அமைதியாக வசித்து வந்தனர். வீட்டை விட்டும் வெளியே வருவதில்லை. கடந்த 2023 ஆம் ஆண்டு ஹாக்மேன் ஒரு முறை வளர்ப்பு நாயுடன் வெளியே வந்தததை பார்த்ததாக அந்த பகுதி மக்கள் மக்கள் கூறுகின்றனர்.who is Gene Hackman?
ஹாக்மேன் 1956 ஆம் ஆண்டு ஃபே மால்டெசி என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு எலிசபெத், லெஸ்லி என்ற இரு மகள்களும் கிறிஸ்டோபர் என்ற மகனும் உண்டு. 1986 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். தொடர்ந்து, 1991 ஆம் ஆண்டு பெர்சியை ஹாக்மேன் மணந்தார்.