குத்துச்சண்டை ஜாம்பவனாக அறியப்படும் மைக் டைசன் அமெரிக்காவை சேர்ந்தவர். சமீபத்தில் தனது 58 வயதில் ஜேக் பால் என்பவருடன் மோதி தோல்வியடைந்தார். ஒரு காலத்தில் உலகம் முழுக்க மைக் டைசனுக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருந்தனர். இதனால், மீண்டும் டைசன் களத்தில் இறங்கியதால் மிகுந்த ஆர்வத்துடன் மோதலை கண்டு களித்தனர். போட்டியில் தோல்வியடைந்தாலும் மைக் டைசனுக்கு 169 கோடி பரிசுத் தொகையாக கிடைத்தது.
கடந்த 1985 ம் ஆண்டு முதல் 2004 வரை குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று வந்தார் மைக் டைசன். 1986 ஆம் ஆண்டு 20 வயதில் ஹெவிவெயிட் சாம்பியன் ஆகியும் சாதனை படைத்தார். ஆனால், மைக் டைசன் வாழ்க்கை கதை திகில் நிறைந்தது.
இவர் குத்துச்சண்டைக்குள் நுழைவதற்கு முன் சிறுவனாக இருந்த போதே சின்ன சின்ன திருட்டு வழக்குகளில் சிக்கி 40 முறை சிறைக்கு சென்றுள்ளார். செயின் பறிப்பிலும் ஈடுபட்டுள்ளார். முதன் முறை சிறைக்கு சென்ற போது வயது 13. சிறார் சிறையில் இருந்த ஆலோசகர் ஒருவர்தான் மைக் டைசனை குத்துச்சண்டை பக்கம் திரும்ப வைத்தார்.
குத்துச்சண்டையில் வெற்றி பெற்று கோடி கோடியாக சம்பாதித்த பிறகும் அவர் சர்ச்சையில் சிக்கிக் கொண்டுதான் இருந்தார். ஒரு முறை எதிர் வீரரின் காதை கடித்து வைத்து அதிர்ச்சியையும் ஏற்படுத்தினார்.
1992 ஆம் ஆண்டு மிஸ். அமெரிக்கா பட்டம் பெற்ற அழகியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக டைசன் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். பின்னர், நன்னடத்தை காரணமாக 3 ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டார்.
சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் குத்துச்சண்டையில் ஈடுபட்டு கோடி கோடியாக சம்பாதித்தார். செல்வத்தின் உச்சத்தில் இருந்த போது, மைக் டைசன் தனது பங்களாவில் 3 புலிகளையும் செல்லமாக வளர்த்தார். இந்த புலிகளுக்காக லட்சக்கணக்கில் செலவழிக்கவும் செய்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி… வானிலை மையம் எச்சரிக்கை!
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி… வானிலை மையம் எச்சரிக்கை!