வெறும் 3 ஆயிரம் பேர்தான்… பாகிஸ்தான் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டும் பலூச்கள் யார்?

Published On:

| By Kumaresan M

பாகிஸ்தான் நாட்டின் மிகப் பெரிய மாகாணங்களில் ஒன்று பலூசிஸ்தான். கிட்டத்தட்ட 1.50 கோடி மக்கள் வசிக்கிறார்கள். இதில் பெரும்பாலோனார் இஸ்லாமியர்கள். இவர்கள் பலூச் மொழியை பேசுகின்றனர்.

50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்துக்களும் இந்த மாகாணத்தில் வசிக்கின்றனர். இந்த மக்கள் தங்கள் பெயருக்கு பின்னால் பலூச் என்று போட்டுக் கொள்கின்றனர். பாகிஸ்தானிலேயே இந்த மாகாணத்தில்தான் மக்கள் தொகை குறைவு. whwho is balocho is baloch?

அதேவேளையில், கனிம வளங்களும் , எண்ணைய் வளமும் நிறைந்தது. தங்கள் மாகாணத்தின் செல்வ வளங்களை பாகிஸ்தான் சுரண்டிக் கொள்வதாக பலூச் ராணுவம் குற்றம் சாட்டுகிறது. கடந்த 1948 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பலூசிஸ்தானின் கலாட் இன மன்னர் கான் என்பவரை வலுக்கட்டாயமாக ஆவணங்களில் கையெழுத்திட வைத்து பாகிஸ்தானுடன் இந்த மாகாணம் இணைக்கப்பட்டதாக பலூச்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த மாகாணத்தை சேர்ந்த மைனாரிட்டி மக்களான பலூச்கள் வறுமையில் வாட, இங்கிருக்கும் வளங்களை பாகிஸ்தான் கொள்ளையடிப்பதாகவும் அவர்கள் நம்புகின்றனர்.

இதனால், பலூசிஸ்தான் மாகாணத்தில் பணி புரியும் பாகிஸ்தானின் முக்கிய அதிகாரிகளையும், பாகிஸ்தான் சீனா பொருளாதார மண்டலத்தில் பணி புரியும் சீனர்களையும் பலூச் ராணுவம் தாக்குவதும் அடிக்கடி நடைபெறுவது உண்டு. கடந்த 2000 ஆம் ஆண்டு வாக்கில் உருவான இந்த விடுதலைப் படையில் மொத்தமே 3 ஆயிரம் பேர்தான் உள்ளனர். ஆனாலும், பாகிஸ்தான் ராணுவத்தால், இவர்களை கட்டுப்படுத்த முடிவதில்லை.who is baloch?

பலூசிஸ்தானில் இந்துக்கள் உள்ளிட்ட மற்ற மதத்தை பின்பற்றும் மக்கள் பாகிஸ்தானின் மற்ற மாகாணங்களை விட சுதந்திரமாகவும் உரிமையுடனும் வாழ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த பிரபல பாலிவுட் சூப்பர்ஸ்டார் ராஜ்குமார் பலூசிஸ்தான் மாகாணத்தில் பிறந்தவர்தான். இவரது இயற்பெயர் குல்பூசன் பண்டிட் என்பதாகும். 1940 ஆம் ஆண்டு இவர் இந்தியாவுக்கு குடி பெயர்ந்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share