பட்டர் சிக்கனை கண்டுபிடித்தது யார்? – நீதிமன்றத்தில் விசித்திர வழக்கு!

Published On:

| By Selvam

Who invented butter chicken

பட்டர் சிக்கன் மற்றும் தால்மக்கானி ஆகிய உணவு வகைகளை உருவாக்கியவர் யார் என்பது தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அசைவ விரும்பிகளிடம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் உணவு வகைகளில் ஒன்று பட்டர் சிக்கன். சற்றே இனிப்பு சுவையுடன் கூடிய இந்த வகை உணவுக்கு உணவு பிரியர்கள் இடையே பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இதே போல் சைவ பிரியர்கள் இடையே தால் மக்கானி என்ற உணவு வகை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. Who invented butter chicken

ADVERTISEMENT

Who invented butter chickented butter chicken

இந்த இரண்டு உணவு வகைகளையும் முதன்முதலாக தயாரித்தவர் டெல்லியைச் சேர்ந்த முன்னாள் சமையற்கலை நிபுணரான கந்தன் லால் குஜ்ரால் என பொதுவாக ஒப்புக்கொள்ளப்படுகிறது.

ADVERTISEMENT

கடந்த 1950-ம் ஆண்டு இந்த உணவு வகைகளை குஜ்ரால் உருவாக்கியுள்ளார். டெல்லியில் உள்ள பிரபல உணவகமான மோதி மஹால் ரெஸ்டாரண்டில் பணியாற்றி வந்தபோது அவர் இதை உருவாக்கியுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் தாரியாகஞ்ச் என்ற உணவக உரிமையாளர்கள், தங்களது இணையதளத்தில் இந்த உணவு வகைகளை உருவாக்கியது தாங்கள்தான் என விளம்பரம் செய்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், இந்த உணவு வகைகள் இரண்டையும் உருவாக்கியது தாங்கள்தான் என உத்தரவிடக் கோரி, மோதி மஹால் உணவகம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மோதி மஹால் உணவகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சந்தீப் சேத்தி, மோதி மஹால் நிறுவனத்தில் உருவாக்கிய உணவு வகைகளை குஜ்ராலின் பெயர் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு, தங்களுடையது என தாரியாகஞ்ச் உணவகம் விளம்பரப்படுத்தி வருவதாகவும், இது தங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் வாதாடினார்.

மேலும், மோதி மஹால் உணவக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்த புகைப்படங்களை எடுத்து தாரியாகஞ்ச் தரப்பினர் விளம்பரப்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது இந்த வழக்கு உணவு பிரியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: சேமியா பிர்ணி

அய்யா வழியா? அயோத்தி வழியா?: அப்டேட் குமாரு

அயோத்தியில் தன்னை முன்னிறுத்தும் மோடி: சுப்பிரமணியன் சுவாமி தொடர் தாக்குதல்!

டிஜிட்டல் திண்ணை: அறநிலையத்துறைக்குள் அயோத்தீ… சேகர்பாபுவை சுற்றி என்ன நடக்கிறது?

Who invented butter chicken

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share