யானை வழித்தடங்களில் மண் எடுக்க அனுமதி அளித்தது யார்? உயர் நீதிமன்றம் கேள்வி!

Published On:

| By Kavi

soil extraction on elephant trails

யானை வழித்தடங்களில் அதிக அளவில் மண் எடுக்க அனுமதி அளித்தது யார் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கோவை வனப்பகுதியில் யானை வழித்தடத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதை தடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதி சதீஷ்குமார், நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் நேற்று (டிசம்பர் 11) விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த அறிக்கையில் 2023-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு நவம்பர் வரை சட்டவிரோதமாக மண் எடுத்தவர்களுக்கு 119 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பதிவு செய்யப்பட்ட வழக்குகள் உள்ளிட்ட விவரங்கள் அந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டிருந்தன. மேலும், தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள் கோவை மதுக்கரை, கரடிமலை ஆகிய இடங்களில் 5 லட்சம் கன மீட்டர் அளவுக்கு மண் அள்ளப்பட்டுள்ளது என்று மாவட்ட நீதிபதி அறிக்கை அளித்திருப்பதாகவும், இது சம்பந்தமாக உரிய புலன் விசாரணை நடத்தப்படவில்லை என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். 

மேலும், அந்த பகுதிகளில் எடுக்கப்பட்ட மண் யாருக்கு அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா? மண் அள்ளப்பட்ட இடங்களை நிரப்புவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என சரமாரியாக நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

இது தொடர்பான விளக்கத்தை மாவட்ட கலெக்டர் மூலம் அறிக்கையாக தாக்கல் செய்வதாக தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் தெரிவித்தார்.

மேலும், இந்த விஷயத்தை அரசு வேடிக்கை பார்க்காது என்றும், எதிர்காலத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதை தடுக்க தொழில்நுட்ப உதவி நாடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: பொடுகைத் தவிர்க்க இதை ஃபாலோ செய்யுங்க!

டாப் 10 நியூஸ்: மத்திய அமைச்சரவை கூட்டம் முதல் கேரளாவில் பெரியார் நினைவகம் திறப்பு வரை!

கிச்சன் கீர்த்தனா: நெல்லிக்காய் முரப்பா !

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்: பல்கலைக்கழகத்தால் பிரிந்த மோகன் பாபு குடும்பம்!

“பாரதியின் கனவு இன்று நனவாகியுள்ளது” : மோடி பேச்சு!

பொது இடங்களில் செல்போனுக்கு சார்ஜ்: எச்சரிக்கும் ஆர்பிஐ! 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share