சைக்கோ த்ரில்லர் ஜானரில் ‘ஒயிட் ரோஸ்’!

Published On:

| By admin

டிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் கதையின் நாயகனாக, முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஒயிட் ரோஸ்’.
சைக்கோ த்ரில்லர் ஜானரில் தயாராகும் இந்த ‘ஒயிட் ரோஸ்’ திரைப்படத்தை ஸ்டூடியோ 9 பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், தயாரிப்பாளர் எஸ்.ரூஸோவுடன் இணைந்து தயாரிக்கிறார்.
தயாரிப்பாளர் ரூஸோவும் மற்றொரு கதாநாயகனாக அறிமுகமாகிறார். நடிகை ‘கயல்’ ஆனந்தி ஆர்.கே.சுரேஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் முன்னாள் தமிழக காவல்துறை உயரதிகாரி எஸ்.ஆர்.ஜாங்கிட்டும் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தத் திரைப்படத்துக்கு ஜோஹன் ஷிவனேஷ் இசையமைக்கிறார்.
அறிமுக இயக்குநரான ராஜசேகர் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தைப் பற்றி இயக்குநர் ராஜசேகர் பேசும்போது, “அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, சைக்கோ த்ரில்லர் பாணியில் விறுவிறுப்பான திரைக்கதையில் இந்த ‘ஒயிட் ரோஸ்’ படம் உருவாகியிருக்கிறது” என்றார்.
இதன் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகர் ஆரி உட்பட பல திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
***-இராமானுஜம்**

Photo of author
admin
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share