’விசில்’ சின்னம்.. தவெகவினருக்கு செங்கோட்டையன் ‘அட்வைஸ்’

Published On:

| By Mathi

Sengottaiyan

தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் விசில் சின்னத்தை எச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

மாமல்லபுரத்தில் இன்று ஜனவரி 25-ந் தேதி நடைபெற்ற தவெக மாநில, மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் பேசியதாவது: திமுக- அதிமுகவில் தலைவர்களே இல்லை. விஜய்யை தமிழ்நாட்டு மக்கள் முதலமைச்சராக்கியே தீருவோம் என பணியாற்றுகிறார்கள். நாளை தமிழ்நாட்டில் நல்லாட்சி தரக் கூடிய ஒரே தலைவர் விஜய்.

ADVERTISEMENT

விஜய் முதல்வராவதை எந்த சக்தியாலும் தமிழ்நாட்டில் இனி தடுத்து நிறுத்திவிட முடியாது.

நமக்கு விசில் சின்னம் கிடைத்துள்ளது. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ADVERTISEMENT
  • தூங்கி கொண்டிருப்பவர் காதில் விசிலடித்துவிடாதீர்கள்..ஓட்டு போய்விடும்
  • பேருந்து நிலையத்தில் வயதானவர்கள் இருக்கும் போது திடீரென விசில் அடிக்கக் கூடாது; அப்படி அடித்தால் அவர்கள் தடுமாறி விடுவார்கள்.

அனைவரும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கிறீர்கள்.. ஒரு ரூபாய் கூட இல்லாமல் இங்கே கூட்டப்பட்டு வந்துள்ளீர்கள். விஜய்தான் நிச்ச்யம் தமிழக முதல்வராவார். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share