கொளுத்த வந்துவிட்டது கோடை. இந்த சீசனில்… உணவு மற்றும் உடல் ஆகியவற்றில் காட்டும் அதே அக்கறையை… ஆடைகள் விஷயத்திலும் நூறு சதவிகிதம் காட்ட வேண்டியது அவசியம். குறிப்பாக, உள்ளாடை விஷயத்தில். Which Underwear Is Best for Summer?
பெண்கள் புடவை, சுடிதார், மிடி, சல்வார் கமீஸ், ஸ்கர்ட், ஜீன்ஸ், டி-ஷர்ட் என்று பலவித உடைகளை அணிகிறார்கள். ஆனால், உடலோடு ஒட்டியிருக்கும் உள்ளாடையைப் பற்றிய தேர்வும் அக்கறையும் வெகு சிலருக்கே இருக்கிறது. Which Underwear Is Best for Summer?
ப்யூர் காட்டன், ஹாய்சரி மெட்டீரியல் மற்றும் பிஸ்லெசி வகை துணிகளில் தயாரிக்கப்படும் உள்ளாடைகளே வெயிலுக்கும் நம்நாட்டு சீதோஷ்ண நிலைக்கும் ஏற்றது. லிக்ரா வகை துணிகளில் தயாரிக்கப்படும் உள்ளாடை, குளிர்பிரதேசங்களுக்கு சரியாக இருக்கும், நம் ஊரில் அவை கிடைத்தாலும் அதை அணிவது அத்தனை சௌகரியமாக இருக்காது.
டீன் ஏஜ் பருவத்தினர் டி-ஷர்ட்டுக்கு உள்ளே அணிய ஸ்பெஷலாக சீம்லெஸ் என்கிற ஒரு வகை பிரேசியர் வந்துள்ளது. பொதுவாக எல்லா பெண்களுக்கும் ஏற்ற வகையில் பிரேசியர்கள் மற்றும் அந்தந்த உடைக்கேற்றபடி வசதியாக அணிந்து கொள்ள ஸ்லிப்புகள் வந்துவிட்டன. ஹாஃப் ஸ்லிப்களை குர்தி போன்ற உடைகளுக்கும், இடுப்புக்குக் கீழ் வரைக்கும் உள்ள ஸ்லிப்களை சுடிதாருக்கும் அணியலாம்.
சரியான உள்ளாடைகளைத் தேர்வு செய்து அணிவது, சௌகரியத்துடன் தன்னம்பிக்கையையும் அளிக்கும். ஃபைபர், நைலான் மெட்டீரியலில் தயாரிக்கப்பட்ட ஃபேன்ஸி உள்ளாடைகள், சருமத்தைப் பாதிக்கலாம். ‘பேடட்’ மற்றும் ‘ஸ்பான்ஞ்’ ரக பிரேசியர்கள் வெயிலுக்கு உகந்ததல்ல. பிரேசியரின் ஸ்ட்ராப் அதிகம் அழுத்தினால், சுட்டெரிக்கும் கோடை அந்த அழுத்தத்தில் அரிப்பை உண்டாக்கிவிடும்.
எனவே, அளவுக்கு அதிகமான இறுக்கத்தில் உள்ளாடை அணிந்து பழக்கப்பட்டவர்கள், கடைகளில் உள்ளாடைகள் சேல்ஸ் பிரிவில் இருக்கும் பெண்களின் உதவியுடன் உங்களுக்கான சரியான உள்ளாடை அளவைத் தேர்ந்தெடுத்து அணியுங்கள்.
நமது தேவைக்கும் வயதுக்கும் ஏற்ப உள்ளாடைகளைத் தேர்வு செய்வது முக்கியம். பேன்ட்டியிலும் காட்டனே சிறந்தது. இறுக்கம் தவிர்த்து, சரியான அளவு தேர்வு முக்கியம். மலிவான எலாஸ்டிக், லேஸ் வைத்த பேன்ட்டிகள் தவிர்த்து, தரமானதை உபயோகிக்கவும்.
அதிக எடை இருப்பவர்களுக்கும், சென் ஸிட்டிவ் ஸ்கின் உடையவர்களுக்கும் இந்தக் கோடையில், தொடை இடுக்குகளில் அரிப்பு, அலர்ஜி உண்டாகக் கூடும். அப்போது பேன்ட்டி அணிவது சிரமமாகலாம். அவர்களுக்கு ஷார்ட்ஸ் போன்ற ‘லெக் பேன்ட்டி’ அணிவது நல்ல தீர்வாக இருக்கும்” என்கிறார்கள் ஆடை வடிவமைப்பாளர்கள். Which Underwear Is Best for Summer?