இந்தியாவில் 72 சதவிகிதம் பேர் மீன் உணவு சாப்பிடுகிறார்கள் என்றும் இந்தியாவில் மீன் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தற்போது மீன் உணவு சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து மீன் உணவு சாப்பிடுபவர்கள் தொடர்பாக இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில், விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் மற்றும் சர்வதேச மீன்கள் அமைப்பு ஆகியவை சமீபத்தில் புதிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டு, அந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வின்படி இந்திய மக்கள் தொகையில் 72.1 சதவிகிதம் பேர் மீன் உணவு சாப்பிடுவது தெரியவந்துள்ளது.
அதாவது இந்தியாவில் 96 கோடி பேர் மீன் உணவு சாப்பிடுகிறார்கள் என்றும் தினமும் மீன் உணவு சாப்பிடுபவர்களில் கேரள மக்கள் 53.5 சதவிகிதத்துடன் முதல் இடத்தில் உள்ளனர்.
கோவாவில் 36.2 சதவிகிதம் பேரும், மேற்கு வங்காளத்தில் 21.90 சதவிகிதம் பேரும், மணிப்பூரில் 19.70 சதவிகிதம் பேரும், அசாமில் 13.10 சதவிகிதம் பேரும், திரிபுராவில் 11.50 சதவிகிதம் பே ரும் தினமும் மீன் உணவு சாப்பிடுகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், வாரம்தோறும் மீன் உணவு சாப்பிடுபவர்களில் அசாம் மற்றும் திரிபுரா ஆகிய இரண்டு மாநிலங்களும் 69 சதவிகிதத்துடன் முதலிடத்தில் உள்ளது.
ஒடிசாவில் 66.8 சதவிகிதம் பேரும், மேற்கு வங்காளத்தில் 65.75 சதவிகிதம் பேரும், அருணாசலப் பிரதேசத்தில் 65.25 சதவிகிதம் பேரும், தமிழ்நாட்டில் 58.2 சதவிகிதம் பேரும் வாரம் ஒருமுறை மீன் உணவு சாப்பிடுகிறார்கள்.
வடகிழக்கு மற்றும் கிழக்கு மாநிலங்கள், தமிழ்நாடு, கேரளா மற்றும் கோவாவில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான மீன் நுகர்வோர் உள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மீன் நுகர்வு 20.9 சதவிகிதம் அதிகரித்துள்ளது, அதே சமயம் பஞ்சாப்பில் கடந்த 15 ஆண்டுகளில் மீன் சாப்பிடுவது 3.9 சதவிகிதம் குறைந்துள்ளது. மொத்த நுகர்வு விகிதம் குறைவாக உள்ள மாநிலங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே மீன் சாப்பிடுவதில் அதிக வித்தியாசம் உள்ளது.
ஆண்கள் வெளியில் உள்ள ஹோட்டல்களில் அதிகம் மீன் சாப்பிடுகிறார்கள். மேற்கு வங்காளம், கேரளா மற்றும் திரிபுரா போன்ற அதிக மீன் நுகர்வு விகிதங்களை கொண்ட மாநிலங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் சம அளவிலேயே மீன் சாப்பிடுகிறார்கள்.
ஆனாலும் மற்ற நாடுகளை விட இந்தியாவில் குறைந்த அளவிலேயே மீன் சாப்பிடுபவர்கள் உள்ளனர்.
மீன் சாப்பிடுபவர்களை கொண்ட 183 நாடுகளில், இந்தியா 129-வது இடத்தில் உள்ளது. ஆனாலும் உலகின் மூன்றாவது பெரிய மீன் உற்பத்தி செ ய்யும் நாடு இந்தியா ஆகும்.
உலக அளவில் மீன் உற்பத்தியில் இந்தியா சுமார் 8 சதவிகிதம் பங்கு வகிக்கிறது. மீன் வளர்ப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
பியூட்டி டிப்ஸ்: உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ற ஆடை எது?
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்… சாப்பிடுவதற்கு சரியான நேரம் எது?
டிஜிட்டல் திண்ணை: ஆதவ் அர்ஜுனாவால் சலசலப்பா? திமுக-விசிக இடையே என்ன நடக்கிறது?
Comments are closed.