அனைவரது வீட்டிலும் ஃபிரிட்ஜ் என்பது அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. ஃபிரிட்ஜ் இருப்பதால் மீதமுள்ள உணவுகளை வைப்பதில் இருந்து அனைத்தையும் அதில் வைப்பது வழக்கமாக உள்ளது. சில பழங்களை ஃப்ரிட்ஜில் வைத்தால் அவற்றின் சத்துக்களை இழக்க நேரிடும். Which food not to keep in fridge?
பொதுவாகவே எந்த உணவுப் பொருளுமே ஃப்ரிட்ஜில் வைக்கும்போது அதன் இயல்பில் மாற்றம் ஏற்படுகிறது. நம் வீட்டு ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாத உணவு பட்டியல் இதோ…
தக்காளியை அதிகக் குளிர் தக்காளியின் பளபளப்பையும் சுவையும் பாதிக்கும். காற்றுப்புகக்கூடிய சாதாரணச் சூழலிலேயே தக்காளி சில நாள் வரை கெடாமல் இருக்கும்.
ஃபிரிட்ஜில் வைக்கும் தக்காளி பழுப்பதை நீங்கள் கவனத்திருக்க மாட்டீர்கள். எனவே, தக்காளியின் சுவையை அதிகம் பெற ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம்.
பேக் செய்யப்பட்ட மீன்களின் இறைச்சியையோ, மீனையோ ஃபிரிட்ஜில் வைக்கவேண்டாம். அதிலிருந்து வெளிப்படும் மீன் நாற்றம் மற்ற பொருள்களுக்கும் பரவி அவற்றின் தன்மையைப் போக்கிவிடும். ஃபிரிட்ஜில் மீனை வைப்பதற்கென்றே ஓர் இடம் இருக்கும். அதில் வைத்துக்கொள்ளுங்கள்.
தானிய வகைகள் சாதாரணச் சூழலில் வைக்கப்படவேண்டியவை. ஈரப்பதமான சூழல் அவற்றைக் கெட்டுப்போகச் செய்துவிடும்.
பிரெட் போன்ற பேக்கரி பொருள்களை ஃபிரிட்ஜுக்குள் வைத்துவிடாதீர்கள். சாதாரண தட்பவெப்பத்தில் சுவையும் மெதுவான தன்மையும் அதிகம் கொண்ட பிரெட், அதிகமான குளிரில் விறைத்துப் போய்விடும். இதனால் சுவையும் கெட்டு, கெட்டித்துவிடும்.
காபி தூள் அல்லது காபி கொட்டை இவற்றை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமில்லை. காற்று புகாத பாட்டிலில் வைத்திருந்தாலே போதும். ஃபிரிட்ஜில் இருந்து வெளியாகும் ஈரப்பதம் காபித் தூளை பாதித்து, கெட்டுப்போகச் செய்துவிடும்.
வாழைப்பழத்தை ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது. ஃபிரிட்ஜில் இருந்து வெளியாகும் அதிகப்படியான குளிரும் இருளும் வாழைப்பழத்தின் சத்தைக் கெடுப்பதோடு, அழுகவும் செய்துவிடும்.
பூண்டை பொறுத்தவரை திறந்தவெளியில் வைத்திருப்பதே நல்லது. ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டால், பூண்டின் சுவை கெட்டு, அதன் நீண்டகால பலனும் பாதிக்கப்படும்.
ஃப்ரிட்ஜில் வைத்த சாக்லேட்டில் வெள்ளைப் படலத்தைப் பார்த்தால், அது அச்சு என்று நம்பவேண்டாம், சாக்லேட்டில் இயற்கையாகவே கொழுப்பு உள்ளது என்பார்கள்.
எனவே அது நமது ஆரோக்கியத்திற்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது, ஆனால் அதன் தன்மையை இழக்கும்போது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
வெங்காயத்தை ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாது. குளிரில் தானும் கெட்டு ஃபிரிட்ஜையும் கெட்ட நாற்றம் உள்ளதாக மாற்றிவிடும்.பேப்பர் பைகளில் வெங்காயத்தைப் போட்டு வைத்திருப்பதே போதுமானது.
சுபஸ்ரீ Which food not to keep in fridge?
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிச. 2-ல் துவங்கும் ‘Pro Kabaddi 10’: தமிழ் தலைவாஸ் அட்டவணை இதோ!
சென்னை: தெரு நாய்கள் கடித்ததில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்!
தீபத்திருவிழாவுக்கு பிளாஸ்டிக் பைகளை எடுத்து வர வேண்டாம்: அமைச்சர் எ.வ.வேலு
