IPL2024: சென்னைக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் ஸ்பின்னர்கள்!

Published On:

| By Manjula

which csk spinner take most wickets

நடப்பு சாம்பியனான சென்னை அணி மினி ஏலத்தில் எந்த வீரர்களை எடுக்க போகிறது? என்பது குறித்த பேச்சுக்கள் தான் சமூக வலைதளங்களில் அதிகமாக உள்ளன.

கையில் வைத்திருக்கும் 31.4 கோடி ரூபாய்க்கு தாராளமாக 3 இந்திய வீரர்கள், 3 வெளிநாட்டு வீரர்கள் என 6 வீரர்களை நல்ல ஒரு தொகை கொடுத்து வளைத்து போடலாம்.

ADVERTISEMENT

ஆனால் 30 வயதை கடந்த வீரர்களை தான் சென்னை அணி எடுக்கும் என்பதால் ரசிகர்கள் நகம் கடித்து காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

5 முறை சாம்பியனான சென்னை அணி 6-வது முறையாக கோப்பையை குறிவைத்து, தோனி தலைமையில் இந்த முறையும் களம் காணுகிறது.

ADVERTISEMENT

இந்த நேரத்தில் 14 சீசன்களிலும் சேர்த்து சென்னை அணிக்காக, அதிக விக்கெட்டுகளை எடுத்த சுழற்பந்து வீச்சாளர்கள் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.

அந்த வகையில் சென்னை அணிக்காக விக்கெட் வேட்டை நடத்திய பந்து சுழற்பந்து வீச்சாளர்கள் இவர்கள் தான்:

ADVERTISEMENT
  1. ரவீந்திர ஜடேஜா – 125 விக்கெட்டுகள்
  2. ரவிச்சந்திரன் அஸ்வின் – 90 விக்கெட்டுகள்
  3. சதாப் ஜகாதி – 45 விக்கெட்டுகள்
  4. முத்தையா முரளிதரன் – 40 விக்கெட்டுகள்
  5. இம்ரான் தாஹிர் – 35 விக்கெட்டுகள்
  6. சுரேஷ் ரெய்னா – 24 விக்கெட்டுகள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மஞ்சுளா 

தனியார் ஊழியர்களுக்கு ஓய்வூதியம்: அடல் பென்ஷன் யோஜனா திட்டம் பற்றி தெரியுமா?

ED அதிகாரி அங்கித் திவாரியை விஜிலென்ஸ் விசாரிக்க தடையில்லை: மதுரை உயர்நீதிமன்றம்

Photo of author
Manjula
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share