உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், முதலிடத்தில் அண்டோரா என்ற குட்டி நாடு உள்ளது.
இரண்டாவது இடத்தில் அமீரகமும் 65வது இடத்தில் பாகிஸ்தானும், 66வது இடத்தில் இந்தியாவும் உள்ளன. சரி… இந்த அண்டோரா நாடு எங்கேயுள்ளது? இந்த நாட்டை பற்றி பலரும் அறிந்து கொண்டிருக்க மாட்டார்கள். அந்த நாட்டை பற்றி இங்கு பார்க்கலாம்.where is andorra safest country
ஐரோப்பாவில் இந்த நாடு பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கிடையே, பைரனீஸ் மலைகளில் அமைந்துள்ளது. 468 சதுர கிலோமீட்டர் பரப்பளவை இந்த நாடு கொண்டுள்ளது.

உலகில் நிலப்பரப்பின் அளவில் 16வதும் மக்கள் தொகை அடிப்படையில் 11வது சிறிய நாடு இதுவாகும். 85,101 மக்கள் வசிக்கின்றனர்.
சுற்றுலாதான் முக்கிய தொழில் ஆகும். கட்டலான் அலுவலக மொழி. அண்டோரா லா வெல்லா என்பது இந்த நாட்டின் தலைநகரமும் நாட்டின் பெரிய நகரமும் ஆகும்.
இந்த நாடு 84.7 மதிப்பெண்களுடன் உலகிலேயே பாதுகாப்பான நாடு என்கிற வகையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அமைதியான நாடான அன்டோராவில் குற்றச்சம்பவங்கள் நடப்பதே கிடையாது. where is andorra safest country
இந்த நாட்டில் இதுவரை குற்றம், மோசடி, வன்முறை என எதுவுமே பதிவானது கிடையாது. பிக்பாக்கெட், திருட்டு , பணப்பையை பறித்தல் போன்ற சிறிய சிறிய குற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. உலகில் ராணுவமே இல்லாத 21 நாடுகளில் அண்டோராவும் ஒன்று.
அமைதியான இந்த நாட்டில் ஐரோப்பாவின் சராசரி வருவாயை விட இந்த நாட்டில் தனிநபர் வருவாய் அதிகமாகும்.