தமிழகத்தில் 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த தேர்வை சுமார் 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.
தேர்வுகள் முடிந்ததும் ஏப்ரல் 12 – 22ஆம் தேதி வரை விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்றது.
இந்நிலையில் தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஏப்ரல் 2024-ல் நடைபெற்ற 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு (S.S.L.C) பொதுத்தேர்வு முடிவுகள் 10.05.2024 (வெள்ளிக்கிழமை) அன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்கத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
தெரிந்து கொள்வது எப்படி?
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதள முகவரியில் அறிந்துகொள்ளலாம்.
www.tnresults.nic.in
www.dge.tn.gov.in
https://results.digilocker.gov.in/
ஆகிய இணையதளங்கள் மூலம் மாணவர்கள் தங்களது ரிஜிஸ்டர் நம்பர் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் தங்களது பள்ளிகளில் கொடுத்துள்ள மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் ரிசல்ட் அனுப்பி வைக்கப்படும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சவுக்கு சங்கர் உடல்நிலை : அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
தென்னிந்தியர்கள் கருப்பர்கள்: சர்ச்சையை கிளப்பிய சாம் பிட்ரோடா ராஜிமானா!