ADVERTISEMENT

கேரளா – தமிழ்நாடு எல்லை முதல் கன்னியாகுமரி வரை ரூ. 1564.23 கோடி செலவில் 4 வழிச் சாலை எப்போது முடிவடையும்?

Published On:

| By Mathi

Kerala–Tamil Nadu Border to Kanyakumari

கேரளா – தமிழ்நாடு எல்லைப் பகுதி முதல் கன்னியாகுமரி வரை ரூ. 1564.23 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் 53.71 கிலோமீட்டர் தொலைவிலான நான்கு வழிச்சாலையில் எஞ்சியுள்ள பணிகளும் கூடுதல் கட்டுமான பணிகளும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் ஏ மணி எம்பி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் நிதின் கட்கரி,

ADVERTISEMENT
  • வேலூர் மக்களவை தொகுதியில் உள்ள லத்தேரி முதல் நெல்வாய் வரை ரூ. 752.94 கோடி செலவில் 20.42 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்க ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளதாகக் கூறினார்.
  • தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட 53 சாலை திட்டப் பணிகள் பற்றிய விவரங்களை எடுத்துரைத்த அவர், இவற்றில் 16 பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளன என்றார்.
  • தர்மபுரி தொகுதிக்கு உட்பட்ட தொப்பூர் முதல் லட்சுமி நகர் வரை ரூ. 242 கோடி செலவில் 85 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருவழிச் சாலை அமைக்கும் பணியும் இதில் அடங்கும்.
  • மேலும், விருதுநகர் தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி முதல் அணியாக்கரப்பட்டி வரை ரூ. 294 கோடி செலவில் 42 கிலோமீட்டர் தூர நான்குவழிச் சாலை விரிவாக்க பணிகள்
  • பல்லடம் முதல் குறுக்கத்தி கிராமம் வரை ரூ. 274 கோடி செலவில் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருவழிச் சாலை நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள்,
  • தர்மபுரி தொகுதிக்குட்பட்ட மஞ்சவாடி கணவாய் முதல் ஏ. பள்ளிப்பட்டி வரை ரூ. 162 கோடி செலவில் 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை பலப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.
  • திருவள்ளூர் தொகுதிக்குட்பட்ட திருநின்றவூர் முதல் திருப்பாச்சூர் வரையிலான நான்கு வழி சாலையில் 17 கிலோ மீட்டர் தூரத்திற்கு எஞ்சியுள்ள பணிகள் ரூ. 467 கோடி செலவில் இந்த ஆண்டு முடிக்கப்படும் என்று அவர் கூறினார்.
  • தென்காசி தொகுதியில் குன்னக்குடி முதல் குத்துக்கல் வலசை வரை ரூ.53 கோடி செலவில் அணுகு சாலை பணிகள்
  • ஈரோடு கோயம்புத்தூர், வேலூர் , மதுரை ஆகிய தொகுதிகளில் 33 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகளை பலப்படுத்தும் பணிகள்(ரூ. 84 கோடி) இந்த ஆண்டு நிறைவடையும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share