திமுகவின் தேர்தல் அறிக்கை கதாநாயகியாகக் கூட இருக்கலாம் என்று தேர்தல் அறிக்கை குழுவின் தலைவர் கனிமொழி எம்பி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கைக்காக மக்களிடம் கனிமொழி தலைமையிலான குழுவினர் தொடர் பயணம் செய்து மக்களிடம் கருத்து கேட்டு வருகின்றனர்.
திமுக தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படும் என்று தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினரிடம் பேசியபோது…
“20 மாவட்டங்களைச்சேர்ந்த 10,000க்கும் மேற்பட்டோரை இதுவரை நேரில் சந்தித்திருக்கிறோம். 4,000க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் நேரில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 18,000க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள், 2,500க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள், 4,500க்கும் மேற்பட்ட சமூக ஊடகம் வாயிலாக பரிந்துரைகள்…500க்கும் மேற்பட்ட கடிதங்கள் அறிவாலயத்துக்கு வந்துள்ளன.
இதுவரை சென்ற மாவட்டங்களைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக பிப்ரவரி 23 ஆம் தேதி வேலூர், ஆரணியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கவுள்ளோம்.
மேலும் எழுத்துப்பூர்வமாக, தொலைபேசி வாயிலாக, சமூக ஊடகங்கள் வழியாக, ஆன்லைன் மூலமாக கோரிக்கைகளை அனுப்புவதற்கான காலக்கெடுவாக பிப்ரவரி 25 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெறப்பட்ட அனைத்து பரிந்துரைகளையும் மதிப்பீடு செய்த பின் அதிகாரப்பூர்வத் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்