குடித்து விட்டு அறை கதவை தட்டிய பிரபல தெலுங்கு நடிகர் … கதறிய விசித்ரா! கைவிட்ட சரத்குமார்

Published On:

| By Kumaresan M

visithra

நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள சினிமா உலகில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, மலையாள நடிகர் சங்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் மோகன்லால் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் 17 பேர் ராஜினாமா செய்தனர். தமிழ் சினிமா நடிகை   விசித்ராவுக்கும் 20  ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டு தெலுங்கு படத்தின் படபிடிப்பு கேரள மாநிலம் பாலக்காட்டிலுள்ள மலம்புழா பகுதியில் நடந்துள்ளது. இந்த படத்தில் தெலுங்கு படவுலகை சேர்ந்த மூத்த நடிகர் ஹீரோவாக நடித்துள்ளார். அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் நடிகர் நடிகைகள் தங்கியுள்ளனர். அந்த படத்தில் நடித்த மூத்த  நடிகரை மரியாதை நிமித்தமாக விசித்ரா சந்தித்துள்ளார். ஆனால், அவர் கேசுவலாக இரவு ரூமுக்கு வந்து விடு என்று கூறியுள்ளார். இதனால், விசித்ரா அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

அதோடு, இரவு நேரத்தில் குடித்து விட்டு வந்து விசித்ரா தங்கியிருந்த அறையின் கதவையும் அந்த நடிகர் தட்டியுள்ளார். அப்போது, அந்த ஹோட்டலில் பொது மேலாளராக இருந்தவர், விசித்ராவின் நிலையை புரிந்து கொண்டு அவருக்கு  அந்த நடிகருக்கு தெரியாமல் அறையை மாற்றி கொடுத்து காப்பாற்றியுள்ளார்.

குடித்து விட்டு நீண்ட நேரமாக கதவை தட்டி பார்த்து விட்டு அந்த நடிகர் சென்று விட்டார். இக்கட்டான சமயத்தில் தனக்கு உதவிய அந்த ஹோட்டல் மேலாளரையே பின்னர் விசித்ரா திருமணம் செய்து கொண்டார் என்பதுதான் சுவராஸ்யமான விஷயம்.

மற்றொரு முறை ஒரு படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் விசித்ராவை  தேவையில்லாமல் தொட்டு பாலியல் வன்கொடுமை செய்தார். அவரை விசித்ரா தட்டிக் கேட்ட போது, அடிக்கவும் செய்துள்ளார்.  ஆனால், இந்த இரு சம்பவங்கள் குறித்தும் நடிகர் சங்கத்திடம் விசித்ரா புகார் அளித்துள்ளார்.

ஆனால், அந்த சமயத்தில் நடிகர் சங்க பொறுப்பில் இருந்த சரத்குமார், நீங்கள் இந்த விஷயத்தை போலீசிடத்தில் கொண்டு சென்றிருக்க வேண்டும். நடிகர் சங்கத்திடம் கொண்டு  வந்திருக்க கூடாது  என்று தன்னிடம் தெரிவித்ததாக நடிகை விசித்ரா அப்போது கூறியிருந்தார்.

தற்போது, தமிழ் சினிமாவிலும் 10 பேர் கொண்ட குழு அமைக்கிறார்களாம். குழு என்ன செய்யப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

ஃபார்முலா 1 கார் ரேஸ் : சென்னை போக்குவரத்தில் 3 நாட்களுக்கு முக்கிய மாற்றங்கள்!

ஹெச்.ராஜா தலைமையில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share