லியோ.. அதிகாலை ஸ்பெஷல் ஷோ அனுமதி உண்டா?

Published On:

| By Selvam

When the Leo Movie Press Meet

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள படம் லியோ. 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் லலித் குமார் இந்த படத்தை தயாரித்து உள்ளார்.

வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் லியோ படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகி யூடியூபில் பல சாதனைகளை  படைத்து வருகிறது.

ADVERTISEMENT

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தான காரணத்தினால் வேகவேகமாக படத்தின் ட்ரெய்லரை தயாரித்து, வெளியிட்டு உள்ளது படக் குழு.

லியோ படத்தின் ட்ரெய்லருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும், ஆங்கில படமான A History of Violence படத்தின் சில காட்சிகள் அப்படியே படமாக்கப்பட்டிருப்பதை சோஷியல் மீடியாவில் மீம்ஸ்களின் மூலம் குறிப்பிட்டுக் காட்டி லோகேஷ் கனகராஜை வறுத்தெடுக்கின்றனர்.

ADVERTISEMENT

இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மற்றொரு புறத்தில் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித், ட்விட்டர் ஸ்பேஸில் ரசிகர்களுடன் பேசுகையில் லியோ படத்தின் அப்டேட்களை அள்ளி வீசியிருக்கிறார்.

தயாரிப்பாளர் லலித் பேசியபோது, லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானது குறித்து விஜய் மிகவும் வருத்தப்பட்டார்.

ADVERTISEMENT

லோகேஷ் கனகராஜுக்கும் விஜய்க்கும் மோதல் என்று சில வதந்திகள் பரவி வந்தது அது அனைத்தும் பொய் என்று கூறினார்.

லியோ ’LCU’ படமா என்பதை தெரிந்துகொள்ள படம் வெளியாகும் வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் லியோ படத்தை உலகம் முழுவதும் 25,000 – 30,000 திரைகளில் திரையிட திட்டமிட்டிருக்கிறோம். அதுமட்டுமின்றி முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியிடப்படும் என்றார்.

இதனைத் தொடர்ந்து லியோ படத்தின் சென்சாரில் படத்திற்கு பெரிதாக எந்த கட்களும் கொடுக்கப்படவில்லை.

அதிகாலை 4 மணிக்கு ஸ்பெஷல் ஷோ திரையிடுவதற்காக தமிழ்நாடு அரசிடம் அனுமதி கேட்டு இருக்கிறோம், கூடிய விரைவில் அனுமதி கிடைக்கும் என நம்புகிறோம் என்று கூறினார்.

லியோ படத்தில் இன்னும் நிறைய பாடல்கள் உள்ளது. அது நிச்சயம் விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமையும் என்று கூறியதோடு, லியோ படத்தின் மூன்றாவது பாடல் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி திங்கட்கிழமை வெளியாகும் என்றும், லியோ படத்தின் பிரஸ் மீட் வரும் அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

லியோ ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ள நிலையில், தற்போது தயாரிப்பாளர் லலித் குமாரின் இந்த பதில்கள் படத்தின் மீதான ஹைப்பை மேலும் அதிகரித்து உள்ளது.

-கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அடுத்த படமும் “அயலான்” இயக்குநருடன் தான்: சிவா கொடுத்த அப்டேட்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share