பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர். தற்போது, பத்திரிகையாளர்களை தாக்கிய வழக்கும் அவர் மீது பதியப்பட்டுள்ளது. மோகன் பாபுவுக்கும் அவரின் மகன் மனோஜூக்கும் ஏற்பட்ட தகராறை செய்தியாக்க சென்ற பத்திரிகையாளர்கள் வைத்திருந்த மைக்கை பறித்து அவர் தாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோகன்பாபு மீது ஏற்கனவே பல சர்ச்சைகள் உண்டு. இவர் எம்.பியாகவும் இருந்துள்ளார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு இவர், தனது மகன் விஷ்ணுவை வைத்து விஷ்ணு என்ற படத்தை எடுத்து வந்தார். கதாநாயகியாக மும்பையை சேர்ந்த ஷில்பா ஷிவானந்த் நடித்தார். இந்த படத்தின் காட்சி ஒன்றில் ஹீரோவாக நடித்த விஷ்ணுவுக்கு முத்தம் கொடுப்பது போல காட்சி எடுக்கப்பட்டது. அப்போது, ஷில்பா சரியாக முத்தம் கொடுக்கவில்லை என்று கூறி மோகன் பாபு கோபமடைந்தார். மீண்டும் ஒரு முறை முத்தம் கொடு என்று நடிகையிடம் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுக்கவே, மோகன் பாபு கடும் ஆத்திரம் கொண்டார். ஷில்பாவின் தலை முடியை பிடித்து இழுத்து அடித்து கீழே தள்ளினார். தடுக்க வந்த நடிகையின் தாயையும் தாக்கினார்.
இதையடுத்து, நடிகையும் அவரின் தாயாரும் ஹைதரபாத் ஜூபிலி ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். ஆனாலும், மோகன்பாபு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அடுத்த நாள் இந்த சம்பவம் குறித்த பேட்டியளித்த மோகன்பாபு, ‘முத்த காட்சியின் போது, தான் அங்கிருந்தால் தன் மகனால் சரியாக நடிக்க முடியாது என்று கருதி காட்சி எடுக்க தொடங்கப்பட்ட 5 நிமிடத்தில் செட்டில் இருந்து வெளியேறி விட்டேன். செட்டில் டைரக்டர் ஷாஜி கைலாஷ் உள்ளிட்ட யாருக்கும் அந்த நடிகை ஒத்துழைப்பு அளிக்கவில்லை. யார் வேண்டுமானாலும் யார் மீதும் போலீசில் புகார் அளிக்கலாம். ஆனால், அந்த நடிகை கொடுத்த புகார் குறித்து போலீசார் என்னிடத்தில் விசாரிக்கவில்லை’ என்று கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
பல ஆயிரம் கோடி நஷ்டத்தில் தமிழக போக்குவரத்து கழகம் : அதிர்ச்சி அளிக்கும் சி.ஏ.ஜி அறிக்கை!