மண்டபம் – ராமேஸ்வரம் பகுதியை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட பாம்பன் புதிய ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நேற்று (நவம்பர் 7) நடந்து முடிந்துள்ள நிலையில், பயணிகள் ரயில் போக்குவரத்து எப்போது தொடங்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மண்டபம் – ராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில் ரூ.550 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தில் நேற்று காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மண்டபத்தில் இருந்து பாம்பன் புதிய பாலம் வழியாக ராமேஸ்வரம் வரை 90 கி.மீ. வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
2.3 கிலோ மீட்டர் நீளமுள்ள பாம்பன் புதிய ரயில் பாலத்தை ரயில் இன்ஜின் 30 விநாடியில் கடந்து சென்றது. இதனால், இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் பொதுமக்கள் தண்டவாளப் பகுதியைக் கடக்க வேண்டாம் என ரயில்வே நிா்வாகம் முன்கூட்டியே எச்சரித்திருந்தது.
இந்த நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி வருகிற 13-ம் தேதி மண்டபம் ரயில் நிலையத்துக்கு வந்து, பாம்பன் புதிய பாலத்தில் நிறைவடைந்த பணிகளைப் பாா்வையிடுகிறாா்.
இதையடுத்து, இந்தப் பாலத்தில் வருகிற 14-ம் தேதி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை ரயில் இயக்கப்படுவதை அவர் நேரில் ஆய்வு செய்கிறார். பின்னர், பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கும் தேதி அறிவிக்கப்படும் என ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ராஜ்மா சாண்ட்விச்
இதுக்கெல்லாமா பிரேக்கிங் போடுவீங்க… அப்டேட் குமாரு
ஒரே நாளில் 9 லாட்டரி விற்பனையாளர்கள் கைது… அதிரடியாக களமிறங்கிய கலைவாணன் ஐபிஎஸ் : யார் இவர்?
மஞ்சக்கொல்லை – பாமக – விசிக மோதல்: நடந்தது என்ன? கிரவுண்ட் ரிப்போர்ட்!
மகன் தாலி கட்டியதை பார்த்து, நெப்போலியன் கண்களில் திரண்ட கண்ணீர்!