‘வேலியன்ட்’ ஸ்ரேயாசுக்கு பிசிசிஐ செய்த துரோகம் : விழுந்த இடத்தில் விதையாக மாறிய வீரம்!

Published On:

| By Kumaresan M

துபாயில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியில் அதிக ரன் குவித்த வீரர் ஸ்ரேயாஸ் ஐயர்தான். இந்த தொடரில் இவர் 5 இன்னிங்ஸ்களிலும் மொத்தம் 243 ரன்களை எடுத்திருந்தார். ஒரு போட்டிக்கு சராசரியாக 40 ரன்கள் அடித்திருந்தார். இறுதி போட்டியிலும் கடும் நெருக்கடியில் 48 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். கடைசிக்கட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் நிலைத்து ஆடவில்லையென்றால், இந்தியாவின் வெற்றி கேள்விக்குள்ளாகியிருக்கும். when BCCI ruining Shreyas’ s career

இப்படி, சாம்பியன்ஸ் டிராபியில் அற்புதமான பங்களிப்பை அளித்த ஷ்ரேயாஸ் ஐயரைத்தான் பிசிசிஐ இரக்கமே இல்லாமல் பழி வாங்கியது. அது எப்போது நடந்தது தெரியுமா?

கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஸ்ரேயாஸ் 530 ரன்கள் அடித்தார். இதில் இரு சதங்களும் அடக்கம். அதன்பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார். அவரது உடல் நிலை சரியில்லை என்பதை பிசிசிஐ ஏற்றுக் கொள்ள மறுத்தது. பேட்டிங் சரியில்லை என்று கூறி அவரை அணியில் இருந்து நீக்கியது. ரஞ்சி டிராபி போன்ற உள்ளூர் போட்டிகளில் ஆடும்படி பிசிசிஐ சொன்னது. when BCCI ruining Shreyas’ s career

எனினும், முதுகு வலி இருந்ததால் ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடவில்லை. 2023 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரிலும் முதுகுவலி காரணமாக பங்கேற்கவில்லை.

ADVERTISEMENT

கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 முதல் 27 வரை நடைபெற்ற ரஞ்சி டிராபி காலிறுதிப் போட்டியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகினார். பிறகு, அவர் முதுகுவலிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். எனினும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் மருத்துவக் குழு அவரை பரிசோதித்து உடல் தகுதியுடன் இருப்பதாக அறிவித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்திய அணியின் டெஸ்ட், டி20 அணி மற்றும் ஒரு நாள் அணியில் இருந்தும் ஸ்ரேயாஸ் நீக்கப்பட்டார். when BCCI ruining Shreyas’ s career

பின்னர், 2024 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக கோப்பையை கைப்பற்றினார். அதோடு, ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்கும் பட்டம் வென்று கொடுத்தார். விஜய் ஹசாரா, சையது முஸ்டாக் தொடர்களில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ADVERTISEMENT

பிசிசிஐயின் மூக்கை உடைக்கும் வகையில் தவிர்க்கவே முடியாத வீரராக மாறினார் ஸ்ரேயாஸ். எல்லாவாற்றுக்கும் உச்சக்கட்டமாக , சாம்பியன்ஸ் டிராபியில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.

வேலியன்ட் என்பது இதுதானோ?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share