வாட்ஸ் ஆப் பயனர்களே உஷார்! நூதன மோசடியில் இருந்து தப்புவது எப்படி பாருங்க!

Published On:

| By Minnambalam Desk

WhatsApp users beware steganography exam

வாட்ஸ் அப் பயனர்களிடம் நூதன முறையில் பணம் பறிக்கும் ‘ஸ்டீகனோகிராபி’ (Steganograpy) மோசடியில் இருந்து தப்புவது எப்படி என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். WhatsApp users beware steganography exam

இன்றைய நவீன உலகில் செல்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

ஆரம்பகாலத்தில் செல்போன்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் என பல வசதிகளை மக்கள் பயன்படுத்த தொடங்கினர்.

இதைத்தொடர்ந்து வங்கி பரிவர்த்தனையிலும் நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் என பலவசதிகள் கொண்டு வரப்பட்டது. அதேபோல் வாட்ஸ் அப் செயலி பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகம் உள்ளது.

ADVERTISEMENT

பல நிறுவனங்களின் தகவல் பரிமாற்றங்களில் வாட்ஸ் அப் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப் பயனர்களை குறிவைத்து ஸ்டீகனோகிராபி மோசடி அரங்கேற்றப்படுகிறது.

ADVERTISEMENT

ஸ்டீகனோகிராபி மோசடி
வாட்ஸ்அப்-ல் பகிரப்படும் படங்கள், ஆடியோக்கள், வீடியோக்களில் தகவல்களை மறைத்து அனுப்பும் முறைக்கு ஸ்டீகனோகிராபி என்று பெயர். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஹேக்கர்கள் தகவல்களை திருடுக்கின்றனர்.

இதுபோன்று ஹேக்கர்கள் ரிமோட் ஆக்சஸ் வழியே உங்கள் போனை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லலாம். பின்னர் KEY logger மூலம் உங்கள் வங்கி தகவலை திருடுகிறார்கள்.
முதலில் வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்ய ஹேக்கர்கள் முயற்சிக்கிறார்கள்.

இந்த மோசடியில் இருந்து தப்பிக்க வாட்ஸ் அப்பில் Auto Download செய்வதை முடக்க வேண்டும். அதற்கு முதலில் Setting பட்டனை கிளிக் செய்து, அதில் Storage and Data கிளிக் செய்து Media Auto Download ஐ கிளிக் செய்து அதில் None ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.

மேலும், தெரியாதவர்கள் அனுப்பும் படங்களை கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும்.

முன்னதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2023-24 அறிக்கையில், “கடந்த 2024ம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் வாட்ஸ்அப் மூலம் இணைய மோசடி நடந்ததாக 43,797 புகார்கள் பெறப்பட்டன. டெலிகிராம் செயலி வழியாக 22,680 புகார்களும், இன்ஸ்டாகிராம் செயலி வழியான 19,800 மோசடிகளும் நடைபெற்றது” என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share