திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாறுவதில் தவறில்லை. அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு சென்னை துறைமுகம் வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது திருப்பரங்குன்றத்தை அயோத்தி போல மாற்ற முயற்சிக்கிறது பாஜக என்ற விமர்சனம் குறித்து செய்தியாளர்களின் கேள்வி எழுப்பினர். அதற்கு, திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாறுவதில் தவறில்லை. அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி ராமரின் ஆட்சியாக இருக்கும்.
திருப்பரங்குன்றம் அருகே தர்கா இருப்பது எல்லோருக்கும் தெரியும். திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்ற எந்த இஸ்லாமியரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை .
உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை அழித்துவிடுவோம் என்று கூறினார். அப்படியானால் சனாதன தர்மத்தை அழிப்பதற்கான ஆரம்ப கட்டப் பணிகளில் ஈடுபடுகிறார்களா ? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கான ஆரம்ப கட்ட பணியில் இருக்கிறார். அவரின் கனவு பலிக்காது. அவருடைய காலமாக இருந்தாலும், எத்தனை காலமானாலும் அதை மாற்ற முடியாது.
தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. இந்த 100 நாள்களில் திமுக என்ன செய்துவிடும் என்று பார்க்கலாம் என்று தெரிவித்தார்.
