பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீமான் ஓசூரில் உள்ள நிலையில், நடிகை பாலியல் வழக்கில், சீமான் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் என அவரது வீட்டில் வளசரவாக்கம் போலீசார் சார்பில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டது. போலீசார் முன்னரே இந்த சம்மன் கிழிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள காவல் ஆய்வாளர் ஒருவர் வந்துள்ளார். what will happend seeman case?
அப்போது, சீமான் வீட்டு டிரைவர் சுபாகர் அவரை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால், அவரை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தது போலீஸ். மேலும், சம்மனை கிழித்த செக்யூரிட்டியான முன்னாள் ராணுவ வீரர் அமல்ராஜும் பிடிபட்டார்.
தங்கள் வீட்டு காவலாளி கைது செய்யப்பட்டதை பார்த்ததும் சீமானின் மனைவி கயல்விழி அங்கு வந்து சாரி சார் நான் சொல்லிதான் கிழித்தார்கள் என்று சொன்னார். இதை பார்த்து ஆத்திரமடைந்த அந்த அதிகாரி என்னங்க சாரி… விசாரித்த வந்தா இப்படிதான் நடப்பீங்களா? என்று காட்டமாக திருப்பி கேட்டார். கயல்விழி சாரி என்று கூறியபடியே பின்னலேயே சென்றார்.

இதற்கிடையே, சீமானின் வழக்கறிஞர் கூறுகையில், வீட்டு காவலாளி முன்னாள் ராணுவ வீரர் என்பதால் உரிமம் பெற்ற துப்பாக்கியை வைத்திருக்கிறார்.பெட்ரோல் குண்டு வீசப்போவதாக தகவல் வந்ததால் இன்று அவர் துப்பாக்கி வைத்திருந்தார் என்று விளக்கமளித்துள்ளார்.
நீதிமன்ற சம்மனை கிழித்தால் என்ன நடக்கும்? what will happend seeman case?
நீதிமன்ற சம்மன் கிழிக்கப்பட்டது குறித்து கோவையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் லோகநாதனிடம் நாம் கேட்ட போது, அவர் கூறியதாவது, “நீதிமன்ற சம்மனை கிழிக்க கூடாது என்றெல்லாம் சட்டம் எதுவும் இல்லை. தினமும் இப்படி ஒட்டப்படும் சம்மன்கள் கிழிக்கத்தான்படுகின்றன.
பொதுவாக, வீட்டில் உள்ளவர்கள் சம்மன் வாங்க மறுத்தால் போலீசார் கதவில் ஒட்டி செல்வது வழக்கம்தான். தாங்கள் நோட்டீஸ் ஒட்டியதற்கு ஆதாரமாக போலீசார் போட்டோ எடுத்துகொள்வதும் பக்கத்து வீட்டாரை ஆதாரமாக காட்டுவதையும் போலீசார் வாடிக்கையாக வைத்திருப்பார்கள். பலரும் போலீசார் சென்றதும் அந்த சம்மனை கிழித்து விடுவார்கள்.

ஆனால், இங்கு போலீசார் கண்ணெதிரேயே நோட்டீசை கிழித்ததுதான் பிரச்னைக்கு காரணமாக அமைந்து விட்டது. அரசு பணியாளரை பணி செய்ய விடாமல் செய்ததாக போலீசார் வழக்கு பதிய வாய்ப்புள்ளது ‘என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, விஜயலட்சுமி பாலியல் வழக்கில், சீமான் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் , இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட வாதங்களை முழுமையாக கருத்தில் கொள்ளவில்லை. எனவே, இந்த மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு வரும் வரை, 12 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. what will happend seeman casந்