மகேஸ்வரிகளால் ஆசிர்வதிக்கப்பட்டவை அரசுப்பள்ளிகள்- யோகஸ்ரீயால் புகழடைந்த ஆசிரியை!

Published On:

| By Kumaresan M

சமீபத்தில் ஜீ டிவியில் சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்ற 9 ஆம் வகுப்பு மாணவி யோகஸ்ரீ மிக அருமையாக இரு பாடல்களை பாடி நடுவர்கள் உள்ளிட்ட அனைவரையும் வியக்க வைத்தார். இதையடுத்து, சோசியல் மீடியாவில் அவர் வைரலானார்.

இந்த நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘பள்ளிக் கல்வித்துறை அரசுப் பள்ளி மாணவர்களுக்காக என்ன செய்யும்?’ என்கிற தலைப்பில் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

‘கரூர் மாவட்டம் மணவாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி யோக ஸ்ரீ.  இவர்,  பால்வார்பட்டி கிராமத்தில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியின் ஒன்பதாவது படிக்கும் மகள். சிறுவயதிலேயே பாடும் திறமை இருப்பதை அந்த மாணவியின் இரண்டாம் வகுப்பு ஆசிரியை மகேஸ்வரி என்பவர் கண்டறிந்துள்ளார். இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து தன்னுடைய ஆதரவில் மாணவியை ஊக்கப்படுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ‘சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ்’ நிகழ்ச்சியில்  மாணவி மேடை ஏறினார். அங்கு, பி சுசீலா பாடலையும், ஆஷா போன்ஸ்லே பாடலையும் பாடி அரங்கை வியக்க வைத்தார். அவ்வளவு பெரிய மேடையை எத்துணை இலகுவாக முதிர்ச்சியாக கையாண்டார் யோக ஸ்ரீ.

அரசுப்பள்ளி மாணவர்களுக்காக தமிழ்நாடு பள்ளிக் கல்விதுறை ஆண்டுதோறும் நடத்தும் கலைப் போட்டிகளில் கரூர் மாவட்டம் சார்பாக பங்கேற்று அங்கு வந்திருந்த ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஆச்சரியப்படுத்தினார் யோக ஸ்ரீ.

பள்ளிக் கல்வித் துறை மூன்றாண்டுகளாக விதைத்த விதைகள் சிறப்பான பலனை தரத்  தொடங்கியிருக்கின்றன. மணவாடி அரசுப் பள்ளி ஆசிரியை மகேஸ்வரி நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவர். மகேஸ்வரிகளால் ஆசிர்வதிக்கப்பட்டவைகள் அரசுப்பள்ளிகள்’ என்று தெரிவித்துள்ளார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

அரசு மருத்துவர் மீது கத்திக்குத்து : 4 பேர் கைது!

ஜார்க்கண்ட் தேர்தல் : 11 மணி நிலவரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share