சில திரைப்படங்களின் ஆக்கம் எப்போது தொடங்கி முடிவுற்றது என்பதே தெரியாது. முழுப்படமும் தயாரான பிறகே, ஊடகங்களில் அவற்றின் பூஜை முதல் இறுதிக்கட்டப் பணிகள் வரை ஒவ்வொரு தகவலாக வெளியாகும். what special in siddharth sarathkumar
அனைத்தையும் ரசிகர்கள் உள்வாங்கிக் கொள்வதற்குள், அந்தப் படமும் தியேட்டரில் வெளியாகிவிடும். நெடுங்காலமாக ஒரு திரைப்படம் உருவாகிக் கொண்டிருப்பதாக ரசிகர்கள் நினைப்பதை விட, இந்த விளம்பர உத்தி நிச்சயம் மேலானதே.
கிட்டத்தட்ட அப்படியொரு எண்ணத்தை விதைத்திருக்கிறது சித்தார்த், சரத்குமார் காம்பினேஷனில் உருவாகியுள்ள ‘3 பிஎச்கே’. இப்படம் வரும் ஜூலை 4ஆம் தேதியன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தேவயானி, ‘குட்நைட்’ மீதா ரகுநாத், யோகிபாபு, கன்னட நடிகை சைத்ரா ஆச்சார் உட்படப் பலர் நடித்துள்ளனர். what special in siddharth sarathkumar
8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ், இதனை எழுதி ஆக்கியிருக்கிறார். பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத் ஏற்கனவே ‘வருஷங்களுக்கு சேஷம்’ மலையாளப் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியிருந்தார். அவர் இசையமைக்கிற முதல் தமிழ் படம் இது.
இன்னும் தினேஷ் கிருஷ்ணன், ஜிதின் ஸ்டானிஸ்லாஸ், கணேஷ் சிவா, வினோத் ராஜ்குமார், சுரேன் ஜி, அழகிய கூத்தன், பிரசாத் சோமசேகர் என்று பல தொழில்நுட்பக் கலைஞர்கள் இதிலுண்டு.
சில மாதங்களுக்கு முன் வெளியான ‘3 பிஎச்கே’ டைட்டில் டீசரில் சரத்குமார், தேவயானி தம்பதியரின் பிள்ளைகளாக சித்தார்த்தும் மீதாவும் இருப்பதான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
தென்சென்னையில் வசிக்கிற ஒரு நடுத்தரக் குடும்பமானது ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் மூன்று பெட்ரூம் கொண்ட ஒரு பிளாட்டை வாங்க முயற்சிப்பதாக, இதன் கதை இருக்குமென்ற யூகத்தை உருவாக்கியது.
என்னதான் ‘பீல்குட்’டாக அந்த டீசர் அமைந்திருந்தாலும், இப்படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் ட்ராமா’ வகைமையில் இருக்கக்கூடும் என்ற எண்ணத்தையும் ஒருசேரத் தந்தது.
ஒரு அலுவலகத்தில் ‘கிளார்க்’ ஆக பணியாற்றுகிற சரத்குமாரையும், சாதாரண குடும்பத் தலைவியாக வருகிற தேவயானியையும் காண்பதே ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரக்கூடும். what special in siddharth sarathkumar
இப்படியொரு பின்னணியில் சித்தார்த், சைத்ரா, மீதா கூட்டணி இடம்பெறுகிறபோது, இப்படம் ‘ரன்’ போன்ற ஒரு கமர்ஷியல் எண்டர்டெயின்மெண்டாகவும் அமையலாம். யார் கண்டது?
இந்த எதிர்பார்ப்புகள் மெய்யாகுமா, பொய்யாகுமா என்பது வரும் ஜூலை 4 அன்று தெரிந்துவிடும். அதற்குள் ‘புரோமோஷன்’ என்கிற பெயரில் படக்குழுவே பாதி விஷயங்களைச் சொல்லிவிடுவார்கள். என்ன நடக்கிறதென்று பார்க்கலாம்! what special in siddharth sarathkumar