இந்தியாவிலேயே இப்படி ஒரு மருத்துவக் கல்லூரி எங்கும் கிடையாது… உதகையில் என்ன ஸ்பெஷல்?

Published On:

| By Kumaresan M

நீலகிரி மாவட்ட தலைநகர் உதகை சுற்றுலாவுக்கு பெயர் போனது. ஆனால், பலரும் அறியாத விஷயங்கள் உதகையில் உள்ளன. உதகையில் பல சர்வதேச பள்ளிகள் உள்ளன. பல தொழிலதிபர்களின் குழந்தைகள் இங்கு படிக்கின்றனர். குட்ஷெப்பர்டு, ஹெப்ரான், லாரன்ஸ் போன்ற பள்ளிகள் அவற்றில் பெயர்போனவை.what special in Ooty Medical College?

அந்த வகையில் , உதகையில் 40 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை கல்லூரியும் முற்றிலும் கட்டுமானம் முடிந்து திறப்பு விழாவுக்கு தயாராகவுள்ளது. வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி உதகை அரசு மருத்துவமனையை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

21 துறைகளுடன் இயங்க போகும் இந்த கல்லூரியில் இந்தியாவிலேயே எந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் இல்லாத வகையில், 50 படுக்கைகள் பழங்குடியின மக்களுகாக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் நிறைந்திருப்பதால், இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதில், 10 படுக்கைகள் பெண்களுக்கு 10 படுக்கைகள் ஆண்களுக்கு 10 படுக்கைகள் நிறை மாத கர்ப்பிணிகளுக்கும் மற்றவை பொதுவாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் புதியதாக 11 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் கட்ட பிரதமர் மோடி காணோலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். அதில், உதகை கல்லூரியும் ஒன்று. 149 கோடி மதிப்பீட்டில் இது கட்டப்பட்டுள்ளது. what special in Ooty Medical College?

இந்த மருத்துவமனை முழுமையாக இயங்கும்பட்சத்தில் உதகை மக்கள் மருத்துவ தேவைக்காக கோவை, மைசூர் போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது. உதகையில் கட்டப்பட்ட முதல் மல்டி ஸ்பெஷல் மருத்துவமனையாக இது அமையும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share