ராஜினாமாவுக்கு முன்… செந்தில்பாலாஜி செய்தது என்ன தெரியுமா?

Published On:

| By Aara

உச்சநீதிமன்ற நிபந்தனைக்கு உட்பட்டு செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது அனைவரும் அறிந்த செய்திதான். ஆனால் ராஜினாமாவுக்கு முன்பாக செந்தில்பாலாஜி செய்த விஷயங்கள் என்னென்ன தெரியுமா? what Senthil Balaji did before resigning?

ஏப்ரல் 27 கோவையில் துணை முதல்வர் உதயநிதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவனிப்பதற்காக  ஏப்ரல் 26 ஆம் தேதி சென்னையில் இருந்து கோவை புறப்பட்டார் செந்தில்பாலாஜி.

ADVERTISEMENT

26 ஆம் தேதி மதியம் தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் செயலாளர் அலுவலகத்திற்கு சென்று தனது ராஜினாமா கடிதத்தை, எழுதிக் கொடுத்தார் செந்தில் பாலாஜி.

ஆனால் அதற்கு சில நாட்கள் முன்பாக அமைச்சராக இருந்து செந்தில் பாலாஜி செய்த சில விஷயங்கள்தான் இன்றும் திமுக வட்டாரத்தில் பேசு பொருளாக இருக்கிறது.

ADVERTISEMENT

“செந்தில் பாலாஜி, தான் ராஜினாமா செய்யப்போகிறோம் என்ற கட்டாயம் வந்துவிட்ட பிறகு… தன்னிடம் மின்சாரத் துறை, டாஸ்மாக் சம்பந்தமாகவும், வேறு அமைச்சர்களின் துறைகள் சம்பந்தமாகவும் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்த இடமாறுதல் கோரிக்கை மனுக்கள் எத்தனை நிலுவையில் இருக்கின்றன என விசாரித்தார்.

அப்படி நிலுவையில் இருந்த தன் துறை சம்பந்தமான விஷயங்களையும் சக அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட துறையின் விஷயங்களையும் அவர்களிடம் பேசி, முடித்துக் கொடுத்துவிட்டார் செந்தில் பாலாஜி.

ADVERTISEMENT

வெள்ளிக் கிழமையிலிருந்து தன்னை சந்திக்கும் கட்சி நிர்வாகிகளிடமும், உதவியாளர்களிடமும், ‘ஏதாவது செய்யணுமா? நீங்க கொடுத்த கோரிக்கை ஏதாவது பாக்கி இருக்கா?’  என்று கேட்டுக் கேட்டு… இடமாறுதல்கள் உள்ளிட்ட நிலுவையில் இருந்த நிர்வாக ரீதியான சின்னச் சின்ன விஷயங்களையும் முடித்துக் கொடுத்துவிட்டார் செந்தில் பாலாஜி. நிர்வாக ரீதியாக அவை சின்ன விஷயங்களாக இருந்தாலும், கோரிக்கை வைத்தவர்களுக்கு அவை பெரிய விஷயங்கள்தான்” என்கிறார்கள் திமுக வட்டாரங்களில்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share