வாக்கு வங்கி என்ன ? பாஜக ஏன் கூப்பிடலை? ராஜ்யசபா சீட்.. சரமாரி கேள்விகளுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி பதில்

Published On:

| By Mathi

Dr. Krishnasamy

புதிய தமிழகம் கட்சி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து இன்னமும் வெளியே போகவில்லை என்று அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

நமது மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி அளித்த நேர்காணல்:

ADVERTISEMENT

கேள்வி: வாக்கு வங்கி என்ன இருக்கும் சார் உங்களுக்கு?

டாக்டர் கிருஷ்ணசாமி: தேவேந்திரகுல வேளாளர்களுடைய வாக்கு வங்கியில 60-லிருந்து 70, 75 சதவீதத்தை நாங்கதான் வச்சிருக்கிறோம்.

ADVERTISEMENT

தேவேந்திரகுல வேளாளர்கள் மத்தியில் இன்னைக்கு வந்து அரசியல் செல்வாக்கு பெற்றிருக்கக்கூடிய ஒரே கட்சி புதிய தமிழகம்தான்.

கேள்வி: இப்போ நீங்க சொல்றத பார்த்தா ஒரு பெரிய செல்வாக்கு, குறிப்பா பார்த்தா தென் தமிழகத்துல ஒரு வலுவான கட்சியா இருக்கீங்க. அப்படி இருக்கும்போது முதல் அழைப்பு உங்களுக்குதானே வந்திருக்கணும்? எந்தக் கட்சி உங்களை தவிர்த்துவிட்டுப் போகணும்னு நினைப்பாங்க? ஜெயிக்கணும்னு எல்லாருக்கும் எண்ணம் இருக்கும். அப்ப இவ்வளவு செல்வாக்கு உள்ள கட்சியைதானே முதல்ல அழைச்சிருக்கணும்? ஏன் இன்னும் அழைப்பு வரல?

ADVERTISEMENT

டாக்டர் கிருஷ்ணசாமி: அது வந்து… ஒன்னு வந்து இப்போ தேர்தல் கூட்டணிகள் வந்து இன்னும் முடிவாகலைங்க, எந்தக் கட்சியும் முடிவு பண்ணல. வேற ஏதாவது காரணங்கள்ல அவங்களுக்கு வேற வேலைகள் இருந்திருக்கலாம். மத்தபடி, அவங்க ‘நாம நம்மளோடதான் இருக்கிறாங்க’ அப்படிங்கிற ‘டேக் இட் ஃபார் கிராண்டட்’ (Take it for granted) – அப்படித்தான் நடந்திருக்கும்னு நினைக்கிறேன்.

அதாவது, புதிய தமிழகம் நம்மளோடதான் இருக்கிறது, வெளியே போகல… 2019-ல போட்டியிட்டோம், 2024-லயும் அவங்க எங்கயும் போகல, நம்மளோடதான் இருக்கிறாங்க அப்படிங்கிற எண்ணத்துல இருக்கலாம்.”

கேள்வி: அப்ப அன்னைக்கு மேடை ஏத்தியிருக்கலாமே? நம்மளோடதான் இருக்கிறாங்கன்னா ஒரு ஃப்ரெண்ட்லியா கூட நீங்க மேடை ஏத்தியிருக்கலாமே, அன்னைக்கே உறுதி செஞ்சிருக்கலாமே?

டாக்டர் கிருஷ்ணசாமி: இல்ல, அதுல வந்து எங்கயோ ஒரு சிறு இடைவெளி ஏற்பட்டிருக்குதுங்க. புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமி கலந்து கொள்கிறார் அப்படிங்கிற ஒரு செய்தி வந்து ஊடகங்கள்ல, எல்லா தொலைக்காட்சியிலயும் வந்தது. ஆனா ஒரு பிரைம் மினிஸ்டர் மீட்டிங்குக்கு வரும்போது அது முறையான தகவல் வந்து தலைமைக்கு வந்திருக்கணும், அவங்ககிட்ட இருந்து வந்திருக்கணும்.

அது அந்த மீட்டிங் நடத்துற அவசரத்துலயா, இல்ல அதை ஏற்பாடு செய்தவர்கள் செய்த குறைபாடான்னு தெரியல. அப்படி நாங்க கலந்து கொள்ளக்கூடாது, கூட்டணியே இல்லைன்னு சொல்லியிருந்தா அந்த வார்த்தையே வந்திருக்காது. அப்போ நாங்க இருக்கிறோம் என்று கருதிக்கொண்டு அவர்கள் மேலோட்டமாக (மேம்போக்காக) விட்டிருக்க வாய்ப்பிருக்கிறது என்று நான் கருதுகிறேன்.

கேள்வி: ஆனா நீங்க சொல்றதுல எதுவும் ஷார்ப்பா (Sharp) இல்லையே சார், ஒரு மழுப்பலாதானே இருக்குது? தேவேந்திர குல வேளாளர் மக்களை பட்டியலினத்தில் இருந்து வெளியேற்றணும் அப்படிங்கறதுல இருந்து பாஜக உறுதியைக் கொடுக்கலைன்னு சொன்னீங்க.. இப்போ பாஜகவுடன் கூட்டணின்னா அந்த மக்களுக்குச் செய்ற அநீதி இல்லையா?

டாக்டர் கிருஷ்ணசாமி: அதாவது 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நாங்க வைச்சுப் போராடுன ஒரே கோரிக்கை அப்பொழுது வந்து பெயர் மாற்றமும் பட்டியலின வெளியேற்றமும். 2021-ல அவங்க வந்து பெயர் மாற்றம் பண்ணிட்டு பட்டியல் மாற்றத்தைப் பண்ணல. அது ஒட்டுமொத்த மக்களுக்கு வந்து ஒரு மிகப்பெரிய மனக்கசப்பு, மனக்கிலேசம், பெரிய வருத்தம், எல்லாருக்கும் ஒரு கவலை இருந்தது. அப்பத்தான் நான் சொன்னேன், இனிமேல் வந்து யார் எந்தக் கட்சிகிட்டயும் அந்தக் கோரிக்கை வைச்சுப் போராட வேண்டாம். நாம ஆட்சிக் அதிகாரத்துக்கு வரக்கூடிய ஒரு காலகட்டம் வரும். அப்பொழுது வந்து இதை நிறைவேற்றிக்கலாம்னு சொல்லிட்டோம். அதனால இப்பொழுது வந்து நான் இந்தக் கோரிக்கை வைத்து இந்தத் தேர்தலைச் சந்திக்கல. நிச்சயமாக நாங்க வந்து அதிகாரத்துக்குள்ள உட்கார்றபோது, ஆட்சிக் அதிகாரத்துக்குள்ள வர்றபோது அந்தக் கோரிக்கைக்கு உயிர் பெற்றுவிடும் அதை நிறைவேற்றுவோம்.

டாக்டர் கிருஷ்ணசாமியின் நேர்காணல் முழுமையாக…

Dr Krishnasamy Interview : என் பலத்தைக் காட்டவா? | Puthiya Tamilagam | Election 2026 | Minnambalam

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share