இந்தியாவிலிருந்து ஏற்றுமதி அரிசியின் மதிப்பு எவ்வளவு?

Published On:

| By Kavi

இந்தியாவிலிருந்து நடப்பாண்டில் 9,670 மில்லியன் டாலர் மதிப்புள்ள அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட அரிசியின் மொத்த அளவுகள் குறித்தும் எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது? அதனால் ஈட்டப்பட்ட வருவாய் குறித்தும் மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாகக் கேள்வி எழுப்பினார். 

ADVERTISEMENT

இதற்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் அனுப்பிரியா பட்டேல் அளித்துள்ள பதிலில்,

“ஈரான், சவுதி அரேபியா, ஈராக், ஓமன், அமெரிக்கா, குவைத், இங்கிலாந்து, கத்தார், கனடா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 21 நாடுகளுக்கு 2021-22 நிதி ஆண்டில், 3,537.49 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பாஸ்மதி அரிசி இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

மேலும் வங்கதேசம், சீனா, நேபாள், வியட்நாம், இலங்கை, சோமாலியா, மலேசியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 23-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பாஸ்மதி அல்லாத 6,133.63 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அரிசி வகைகள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது” என்று எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

ராஜ்

ADVERTISEMENT

மாண்டஸ் புயல்: கனமழை எச்சரிக்கை!

முதல்வரின் தென்காசி பயணம் : இது ரயிலா? நகரும் வீடா?

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share