சென்னையின் முதல் ‘யு’ வடிவ மேம்பாலம்: என்ன ஸ்பெஷல்?

Published On:

| By Monisha

chennai first u turn bridge

Chennai first u turn bridge

சென்னையின் முதல் யு வடிவ மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 23) திறந்து வைத்தார்.

ADVERTISEMENT

சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் வாகன ஓட்டிகள் சிரமமின்றி பயணம் செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் சென்னை ஓ.எம்.ஆர் ராஜிவ் காந்தி சாலை மற்றும் இ.சி.ஆர் சாலையை இணைக்கும் டைடல் பார்க் சிக்னல் சந்திப்பு மற்றும் இந்திரா நகர் சிக்னல் சந்திப்பை கடக்க காலை மற்றும் மாலை நேரங்களில் பீக் ஹவரில் 30 முதல் 40 நிமிடங்களுக்கு மேலாவதாகவும், இதற்கு அரசு தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கொண்ட குழுவினர் டைடல் பார்க் மற்றும் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே மேம்பாலம் கட்ட பரிந்துரை செய்தனர்.

ADVERTISEMENT

அந்த பகுதியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து உள் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளுக்காக ரூ.108.13 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

அதன்படி ராஜிவ் காந்தி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க டைடல் பார்க் மற்றும் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே 18.15 கோடி ரூபாய் செலவில் 237 மீட்டர் நீளமும், 7.50 மீட்டர் ஓடுதள அகலத்துடன் இரண்டு வழித்தடம் கொண்ட ‘யு’ வடிவ மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது.

chennai first u turn bridge

இந்த பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக சென்னை தலைமை செயலகத்தில் இருந்து இன்று காணொளி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதன் மூலம் டைடல் பார்க் சிக்னல் சந்திப்பு மற்றும் இந்திரா நகர் சிக்னல் சந்திப்பை கடக்க வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. Chennai first u turn bridge

சோழிங்கநல்லூர் திசையில் இருந்து வரும் வாகனங்கள் இந்திரா நகர் மேம்பாலம் வழியாக ஏறி ‘யு’ திருப்பம் எடுத்து, இந்திரா நகர் வழியாக அடையாறு மற்றும் திருவான்மியூர் ஆகிய பகுதிகளுக்கு போக்குவரத்து நெரிசலின்றி விரைந்து செல்ல இயலும் என்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

ரன்பீர் சிங்கின் அசர வைக்கும் ‘அனிமல்’ ட்ரெய்லர்!

21 ஆண்டுகளுக்கு பிறகு… ஒரே ஸ்டூடியோவில் கமல் – ரஜினி!… வைரல் வீடியோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share