இந்தியாவின் வர்த்தகக் பற்றாக்குறை (merchandise trade deficit) மே மாதத்தில் 1.8 லட்சம் கோடி ரூபாய் இருந்தது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. what is the merchandise trade deficit of may
இது கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்த 2.2 லட்சம் கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.
இதுவே கடந்த ஆண்டு (2024) மே மாதத்துடன் ஒப்பிட்டால், 1.9 லட்சம் கோடியாக இருந்தது.
ஏற்றுமதி-இறக்குமதி நிலை மே 2025:
இந்தியாவின் மே மாத ஏற்றுமதி அளவு 3.3 லட்சம் கோடியாக இருந்து. கடந்த ஆண்டு இதே மாதத்திலிருந்த 3.41 லட்சம் கோடி ரூபாயுடன் ஒப்பிட்டால் 2.17% ஏற்றுமதி குறைந்துள்ளது.
இதுவே இறக்குமதியின் அளவு 5.22 லட்சம் கோடி ரூபாயாக இருந்து. கடந்த ஆண்டு (2024) மே மாதம் இருந்த 5.31 லட்சம் கோடியுடன் ஒப்பிட்டால் 1.7% குறைந்துள்ளது.
இதனால், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இரண்டிலும் சிறிய அளவிலான இறக்கம் காணப்பட்டது.
சேவைத் துறை வர்த்தகம்:
சேவைகள் துறை வர்த்தகத்தில், இந்தியா 1.2 லட்சம் கோடி உபரியை தொகை பெற்றுள்ளது.
சேவை ஏற்றுமதியில் 2.79 லட்சம் கோடியாகவும், இறக்குமதியில் 1.47 லட்சம் கோடியாகவும் இருந்தது.

முக்கிய ஏற்றுமதி வளர்ச்சி மே 2025 :
மின்னணுப் பொருட்கள் (மொபைல் போன்கள் உட்பட) – 54% அதிகரிப்பு.
ரசாயனப் பொருட்கள் – 16% அதிகரிப்பு.
மருந்துப் பொருட்கள் – 7.38% அதிகரிப்பு.
பொருளாதார நிபுணர்களின் கணிப்பு படி இந்த ஆண்டு வர்த்தக பற்றாக்குறை 2.15 லட்சம் கோடியாக குறையும் என எதிர்பார்த்திருந்த நிலையில், அதைவிடச் சிறந்த குறைவாகவே ஏற்பட்டுள்ளது.