கோடையைக் குதூகலமான காலமாக மாற்றுவதில் பெரும் பங்கு நாம் அணியும் ஆடைகளுக்கு இருக்கிறது. அப்படியென்றால் ஃபேஷன் மிளிரும் ஆடைகளைக் கோடையில் தவிர்க்க வேண்டுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். ஆனால், கோடையில் ஃபேஷன் ஆடைகளைத் தவிர்க்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.
கோடையில் வெப்பம், வியர்வை ஒரு புறம் இருந்தாலும், அது நம்முடைய ஃபேஷன் ஆர்வத்தைப் பாதிக்கத் தேவையில்லை. நாம் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் கோடைக்கு ஏற்ற ஆடைகளைச் சரியாகத் தேர்ந்தெடுப்பதைத்தான்.
இந்த சம்மர் ஃபேஷனில் பிரதானமான இடம் பிரிண்ட் ஃபேப்ரிக் (Print Fabric) மற்றும் டை அண்ட் டை (Tie and Dye) பாணி ஆடைகளுக்கு இருக்கிறது.
இதில் பூக்கள் (Floral Design) மற்றும் வடிவியல் டிசைன்கள் (Geometric Design) என இரண்டு வகைகள் இருக்கின்றன. ஃபுளோரல் டிசைன்களைக்கூட ஆஃப் டிராப், ப்ரிக் ரிப்பீட் டிசைன்கள் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இந்த ஆடைகளை அணிவது இப்போது ஃபேஷன் டிரெண்டுடன் பொருந்திப் போகும்.
கோடைக்குப் பொருத்தமான உடை பருத்தி சல்வார் கமீஸ்தான். சிந்தெடிக் ஆடைகளைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.
தளர்வான கால்சட்டைகளைத் தேர்ந்தெடுப்பதே கோடைக்கு ஏற்றதாக இருக்கும். குர்தாக்களுக்கு இறுக்கமான டைட்ஸ் அணிவதைத் தவிர்ப்பது நல்லது.
இந்த சம்மருக்கு ஏற்ற டிரண்ட் நிறங்கள்.. பிரைட் மற்றும் மிடில் லைட் கலர்கள். நியான் நீலம், நியான் பச்சை, நியான் பிங்க், லாவண்டர் போன்றவை பிரைட் கலர்களுக்கு உதாரணம்.
‘ஓ நெக் பாட்டிங் ஸ்லீவ் போமியா’ பாணி ஆடைகளும் சம்மருக்குக்கேற்ற ஃபேஷன் ஆடைகளே.
வேலைக்குச் செல்பவர்கள் முக்கால் ஸ்லீவ் வெஸ்டர்ன் குர்தாக்களை அணியலாம். கேப் ஸ்லீவ் ஆடைகள் எல்லா கோடைக் காலத்திற்கும் ஏற்றவை.
ஷிஃபான், ஜார்ஜெட், நெட் ஃபேப்ரிக், ஜரி, ஸ்டோன் வேலைப்பாடுகள் உள்ள உடைகளைக் கோடையில் அணியக் கூடாது.
புடவைகளைப் பொறுத்தவரை, ஃபைபர் புடவைகள் கோடைக்கு ஏற்றவை அல்ல. கனமான புடவைகளைத் தவிர்த்து, பருத்திப் புடவைகளை அணிவது சிறந்தது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : பஜ்ஜி மிளகாய் வெஜ் கைமா
டிஜிட்டல் திண்ணை: சிறுத்தைக் கணக்கு… ஸ்டாலின் ஆலோசனை!
திருமா கிண்டும் தெலங்கானா குருமா: அப்டேட் குமாரு
“மோடியின் ஃபார்முலா இதுதானா?” : போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி கேள்வி!