ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும் குங்குமாதி தைலம் சருமத்தை சிவப்பாக்க உதவும் என்கிறார்கள் பலர். அதை யார், எப்படி, எப்போது உபயோகிக்க வேண்டும் என்று விவரம் தெரியாமல் பயன்படுத்துபவர்களும் உண்டு. What is the benefit of Kumkumadi Tailam?
உண்மையில் சருமத்தை இளமையாக, பொலிவாக வைத்திருக்க ஆயுர்வேதத்தில் மருந்துகள் உள்ளனவா? ஆயுர்வேத மருத்துவர்களின் பதில் என்ன?
“யூடியூபை திறந்து குங்குமாதி தைலம் என்று தேடினால் யூடியூப் யுனிவர்சிட்டியிலிருந்து தகவல்கள் கொட்டும். அதில் எது சரி, எது பொய் என்று கண்டறிவதுதான் மக்களுக்கான சவால்.
ஆட்டுப்பாலுடன் நல்லெண்ணெய், குங்குமப்பூ, கொம்பரக்கு, அதிமதுரம் போன்றவை அடங்கிய ஈரமான மூலிகை பேஸ்ட் , தாமரை, ஆல், மஞ்சட்டி, சந்தனம், வெட்டிவேர்,
பேய்ப்புடல் போன்ற மூலிகை குடிநீர் சேர்த்து ஆயுர்வேத தைலங்கள் காய்ச்சும் முறைப்படி தயாரிக்கப்படுகிற சக்திவாய்ந்த செறிவூட்டப்பட்ட ஒட்டுமொத்தமே குங்குமாதி தைலம்.
அழகுசாதன பொருட்களை அவற்றின் கவர்ச்சிகரமான லேபிளையோ பேக்கிங்கையோ வைத்து எடை போடக்கூடாது. ஆயுர்வேத மருந்து என்ற லைசென்ஸ் நம்பர் இல்லாத குங்குமாதி தைலம் முழுக்க போலியாகவே இருக்க வாய்ப்புள்ளது.
அசல் குங்குமாதி தைலத்தைப் பயன்படுத்தினால் முகம், முழு நிலவு போல மாறும் என்று யோகரத்னகர ஆயுர்வேத நூல் சொல்கிறது.
பருக்கள், கரும்புள்ளிகள், மங்கு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கும் குங்குமாதி தைலம் பலன் தருவதாக ஆயுர்வேத நூல்கள் குறிப்பிடுகின்றன.
சரும நிறத்தையும் மேம்படுத்தும் என்று அஷ்டாங்க ஹிருதயம் ஆயுர்வேத நூல் சாட்சி சொல்கிறது.
ஆனால், ஏழே நாட்களிலோ, இத்தனை நாட்களிலோ சிகப்பழகு என்றெல்லாம் மாய வார்த்தைகளை எல்லாம் இந்த மருந்தை ஆயுர்வேத நூல்கள் பரிந்துரைக்கவில்லை.
ஆயுர்வேதத்தின்படி, சரும ஆரோக்கியத்தையும் இளமையையும் ஈரப்பதத்தின் சமநிலை (சமநிலையில் உள்ள கபம் ), சருமத்தின் பல்வேறு ரசாயன மற்றும் ஹார்மோன் எதிர்வினைகளை ஒருங்கிணைக்கும் வளர்சிதை மாற்ற வழிமுறைகளின் செயல்பாடு (சமநிலையில் உள்ள பித்தம்) மற்றும் சருமத்தின் வெவ்வேறு அடுக்குகளுக்கு ரத்தம் மற்றும் ஊட்டச்சத்துகளின் திறமையான சுழற்சி (வாதத்தின் சமநிலை) எனப் பல காரணிகள் தீர்மானிக்கின்றன. What is the benefit of Kumkumadi Tailam?
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…