“காதலும் இல்லை… நட்பும் இல்லை…” அது என்ன ‘சிச்சுவேஷன்ஷிப்’? – இளைஞர்களை ஆட்டிப்படைக்கும் புது டிரெண்ட்!

Published On:

| By Santhosh Raj Saravanan

what is situationship meaning difference between fling pros cons tamil lifestyle news

“நாங்க டேட்டிங் பண்றோமா இல்லையான்னு எனக்கே தெரியல…” – இன்றைய ஜென்-ஜி (Gen-Z) மற்றும் மில்லினியல்களிடம் அடிக்கடி கேட்கும் டயலாக் இது. காதலுக்கும், நட்புக்கும் இடைப்பட்ட ஒரு புரியாத நிலையைத்தான் இப்போது ‘சிச்சுவேஷன்ஷிப்’ (Situationship) என்று அழைக்கிறார்கள். கமிட்மென்ட் பயம் உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கும் பாதை இது.

சிச்சுவேஷன்ஷிப் என்றால் என்ன?

ADVERTISEMENT

இது ஒரு பெயர் இல்லாத உறவு. நீங்கள் இருவரும் காதலர்களைப் போலவே மணிக்கணக்கில் பேசுவீர்கள், டேட்டிங் செல்வீர்கள், நெருக்கமாக இருப்பீர்கள். ஆனால், “நாம் காதலிக்கிறோமா?” என்று கேட்டால், “இப்போதைக்கு எதுவும் வேண்டாம், அப்படியே போவோம் (Go with the flow)” என்று பதில் வரும். சுருக்கமாகச் சொன்னால், லேபிள் (Label) இல்லாத உறவுமுறை.

‘ஃபிளிங்’ (Fling) -கிற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

ADVERTISEMENT

பலரும் இதை ஒன்றாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் வித்தியாசம் உள்ளது.

ஃபிளிங் (Fling): இது பெரும்பாலும் குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கும். இதில் உடல் ரீதியான ஈர்ப்புக்கே (Physical Intimacy) முக்கியத்துவம் அதிகம். உணர்வுப்பூர்வமான பிணைப்பு (Emotional bond) பெரிதாக இருக்காது. “ஜஸ்ட் ஃபார் ஃபன்” ரகம் இது.

ADVERTISEMENT

சிச்சுவேஷன்ஷிப்: இது நீண்ட நாட்களுக்குக் கூடச் செல்லும். இதில் மனரீதியான பிணைப்பு, அக்கறை எல்லாம் இருக்கும். ஆனால், “நீ என் கேர்ள் ஃபிரண்ட்/பாய் ஃபிரண்ட்” என்ற அங்கீகாரம் மட்டும் இருக்காது.

நன்மைகள் (Pros):

சுதந்திரம்: “எங்கே போன? யார்கிட்ட பேசின?” என்ற கேள்விகள் இருக்காது. உங்கள் கேரியர் அல்லது படிப்பில் முழு கவனம் செலுத்தலாம்.

அழுத்தம் இல்லை: திருமணம், எதிர்காலம் பற்றிய பயம் இல்லாமல், நிகழ்காலத்தை மட்டும் ரசிக்க விரும்புபவர்களுக்கு இது ஏற்றது.

நிதானம்: ஒருவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும்.

தீமைகள் (Cons):

குழப்பம் (Confusion): “நமக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்ற கேள்வி எப்போதும் மனதை அரித்துக்கொண்டே இருக்கும். ஒரு நிச்சயமற்ற தன்மை (Uncertainty) மன உளைச்சலைத் தரும்.

பொறாமை: அவர் வேறு யாருடனாவது பேசினாலோ, பழகினாலோ உங்களுக்குப் பொறாமை வரும். ஆனால், அதைக்ட்டிக் கேட்கும் உரிமை உங்களுக்கு இருக்காது.

ஏமாற்றம்: பெரும்பாலும் இதில் ஒருவர் சீரியஸாக மாறிவிடுவார், மற்றவர் “ஜாலியாக” இருப்பார். இறுதியில் ஒருவர் பலத்த காயத்துடன் வெளியேற நேரிடும்.

சிச்சுவேஷன்ஷிப் என்பது “பாதுகாப்பான இடைவெளி” போலத் தோன்றலாம். ஆனால், தெளிவான தகவல் பரிமாற்றம் (Communication) இல்லையென்றால், இது ஒருவரை மனரீதியாக உடைத்துவிடும். உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்!

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share